இந்த பட்ஜெட் நாட்டிற்கு மிகவும் முக்கியம்! எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு!

0
66

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக நடப்பதற்கு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறேன் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

இந்த வருடத்தின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மிக முக்கியத்துவம் பெறுகின்றது. நாட்டிற்கு ஒரு நல்ல எதிர்காலம் கிடைப்பதற்கு இந்த வருடம் முக்கியமாக இருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடைபெறுவதற்கு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

எல்லா கட்சிகளின் உறுப்பினர்களின் கருத்தும் வரவேற்கப்படுகின்றன. இந்தக் கூட்டத்தொடரில் எல்லா பிரச்சனைகளும் அதற்குரிய தீர்வும் விவாதிக்கப்படும் நாட்டுடைய மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு விவாதத்தில் பங்கேற்க வேண்டும். மக்களுடைய விருப்பத்தை வடிவம் செய்ய எந்தவிதமான தடையும் இருந்துவிடக்கூடாது .இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நாட்டின் வரலாற்றிலே 2020 ஆம் வருடத்தில் பல சலுகைகள் ஐந்து சிறிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த சிறிய பட்ஜெட்டின் ஒரு பகுதியாக இந்த பட்ஜெட் இருக்கும் என்று நம்புகின்றேன். பாராளுமன்ற விவாதங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கிறார்.