மேலும் ஒரு வார காலம் நீட்டிக்கப்படுகிறதா? ஊரடங்கு தீவிர ஆலோசனையில் முதலமைச்சர்!

0
72

தமிழ்நாட்டின் நோய்த்தொற்று பரவல் காரணமாக, கடந்த மாதம் பத்தாம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு ஜூன் மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது. தற்சமயம் நோய்த்தொற்று பரவல் சற்று குறைய தொடங்கி இருக்கின்றது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் ஒரு சிலர் தளர்வு உடன் கூடிய ஊரடங்கு ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு எதிர்வரும் 14 ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கின்ற சூழ்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்குபெற்ற உயரதிகாரிகள் தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் குறைவாக இருக்கின்ற 27 மாவட்டங்களில் இன்னும் ஒரு சில தளர்வுகள் வழங்கி ஜூன் மாதம் 21ஆம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதோடு நோய்த்தொற்று பரவல் குறைவாக இருக்கின்ற மாவட்டங்களில் இருக்கின்ற மதுபானக்கடைகள் டோக்கன் அடிப்படையில் திறக்கலாம் என்று தகவல் கிடைத்திருக்கிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஊரடங்கு தளர்வு மற்றும் நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை இன்று முதலமைச்சர் வெளியிடுவார் என்று சொல்லப்படுகிறது.