மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!  ஜூன் மாதம் இந்த தேதியில் தான் பள்ளிகள் திறக்கப்படுமாம் கல்வி அமைச்சர் தகவல்! 

0
174
#image_title

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!  ஜூன் மாதம் இந்த தேதியில் தான் பள்ளிகள் திறக்கப்படுமாம் கல்வி அமைச்சர் தகவல்! 

ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறப்பு. அடுத்த ஆண்டு பொது தேர்வுக்கான தேதிகளையும் அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

6 முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 1 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1-5 முறையான மாணவர்களுக்கு, ஜூன் ஐந்தாம் தேதி முதல் பள்ளிகள் துவங்கும் என்றும், பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம், அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் சென்னையில் இன்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, அடுத்த கல்வி ஆண்டுக்கான நாள்காட்டியை அமைச்சர் வெளியிட்டார் . அதனை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,

1 முதல் 5ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 6-12 வரையான மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு மார்ச் 18ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கும் எனவும், 2024 மார்ச் 19 ல் ,11 ஆம் வகுப்பு பொதுதேர்வும் ஏப்ரல் 8 ல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் துவங்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பள்ளிகள் திறந்ததும் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும், மாணவர்களுக்கான இலவச பொருட்களும் உரிய காலத்திற்குள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

வெயில் தாக்கம் அதிகமாக இருந்தால், பள்ளி திறப்பை தாமதப்படுத்துவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

author avatar
Savitha