மதுக்கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்படுகிறது! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

0
181
#image_title
மதுக்கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்படுகிறது! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைக்க தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 5329 மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. 500 மதுக்கடைகள் நிறந்தரமாக மூடப்படும் என்று செந்தில் பாலாஜி அறிவித்தபடி மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி 500 மதுக்கடைகளை மூட அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு மத்தியில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மதுக்கடைகளை மூடக் கோரியும், மது விற்பனைக்கு எதிராகவும் எதிர் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றது. இதையடுத்து 500 மதுக்கடைகளை மூடவும், மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்கவும் தமிழக அரசு ஆலோசனை செய்து வருகின்றது.
அதன்படி மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளை பிற்பகல் 1 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு மூடப்படும் கடைகளை இரவு 9 மணிக்கு மூடவும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடைசியாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் டாஸ் மாக் கடைகளின் நேரம் காலை 10 மணிக்கு பதிலாக மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று அறிவித்தார். அவர்கள் அறிவித்த இந்த நேரம் தான் 7 வருடமாக உள்ளது. இதையடுத்து டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நேரத்தை தமிழக அரசு மாற்றுவதற்கு தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.