ஓஹோ அவ்வளவு ஆச்சா? கட்சித் தலைமை எடுத்த அதிரடி முடிவு கதறும் உடன் பிறப்புகள்!

0
70

தமிழ்நாட்டிலிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் சென்ற மாதமே அறிவித்துவிட்டது.

அதன்படி சென்ற மாதம் 28ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நன்றாக ஆறாம் தேதி முடிவடைந்து தற்சமயம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.

ஆகவே இந்த தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு கட்சி அலுவலக வாசலில் வந்து நிற்கிறார்கள். இந்த நிலையில், போட்டியை சமாளிக்கும் விதமாக கட்சித் தலைமை நேர்காணல் மூலமாக வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து வருகிறது.

இந்த நேர்காணலில் வேட்பாளர்கள் லட்சம் மற்றும் கோடி என்று தாங்கள் செலவு செய்யும் தொகை தொடர்பாக தெரிவித்தார்கள். இதன் காரணமாக,  இன்ப அதிர்ச்சியடைந்த தலைமை அதிகமாக செலவு செய்யும் ஒரு சிலரை தேர்வு செய்துவிட்டு பலரை நிராகரித்துவிட்டது.

இதில் நிராகரிக்கப்பட்ட சிலர் எனக்கா வாய்ப்பு கொடுக்க மாட்டேங்கறீங்க? என்று தெரிவிக்கும் வகையில்,  சுயேட்சையாக தேர்தலில் களமிறங்க தொடங்கிவிட்டார்கள்.

இப்படி தன்னுடைய கூட்டணி கட்சிகளை எதிர்த்து தனியாக களமிறங்கிய பலரை திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியிருக்கிறார்.

சென்னை, திருவொற்றியூர், செங்குன்றம், மதுரவாயல், காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர், தாம்பரம், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, திருப்பூர், தர்மபுரி ,பென்னாகரம் தஞ்சை, சேலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுயேட்சையாக தேர்தலை சந்திக்க திட்டமிட்ட  வேட்பாளர்கள் பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.