இந்த மாவட்டத்தில் 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த நலத்திட்ட உதவிகள்! முதல்வரின் அசத்தலான செயல்!

0
133
M.G. Stalin attended the Tamil Nadu Investors Conference! Signed 60 contracts!..
M.G. Stalin attended the Tamil Nadu Investors Conference! Signed 60 contracts!..

இந்த மாவட்டத்தில் 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த நலத்திட்ட உதவிகள்! முதல்வரின் அசத்தலான செயல்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு சில நலத்திட்ட உதவிகளையும் ஸ்டாலின் வழங்கி வருகிறார். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதன்முறையாக பதவி ஏற்ற பின்பு இன்று தான் கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று சனிக்கிழமை காலை கரூர் பயணியர் மாளிகையில் இருந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.மேலும் இவ்விழாவில் திருமாநிலையூர் மைதானத்திற்கும் அவர் வருகை புரிந்துள்ளார்.இங்கு முதலில் சிறிய உரையாடல்களை முடித்த பின்பு விழா மேடையில் 80 ஆயிரத்து 555 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.

பிறகு நடப்பு அரசியல்களைப் பற்றி மு.க.ஸ்டாலின் பேருரையாற்றினார். இதையெடுத்து கரூர் மாவட்டத்தில் தொடங்கவிருக்கும் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கியும் வைத்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வரும் வழியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் வழிநெடுவிலும் நின்றும் அவர் வாகனங்களின் மீது பூக்களை தூவியும் பிரமாண்டமான வரவேற்பை அளித்தார்கள். இந்நிலையில் முதலமைச்சர் வருகையொட்டி இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K