Connect with us

Breaking News

“களை எடுக்க ஏக்கருக்கு 8 ரூபாய் மட்டுமே ” அசத்தும் அக்ரி ஈசி இயந்திரம்!

Published

on

“களை எடுக்க ஏக்கருக்கு 8 ரூபாய் மட்டுமே” அசத்தும் அக்ரி ஈசி இயந்திரம்!

வேளாண் பணிகளை எளிதாக்கும் வகையில் கோவையில் அக்ரி ஈசி எனும் விவசாய இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இன்றைய நவீன காலகட்டத்தில் நிலங்களில் இறங்கி உழவுப் பணிகளை மேற்கொள்ள போதுமான ஆட்கள் கிடைப்பதில்லை. அதனை ஈடுகட்டும் வகையில் கோயம்புத்தூரில் முழுவதும் பேக்டரியல் இயங்கும் அக்ரி ஈஸி எனும் விவசாய இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உழவு பணிகளுக்கு டிராக்டர் பயன்படுத்தப்படுவது போல களையெடுப்பதற்கு இந்த இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கான நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் சீதாலட்சுமி கலந்து அக்ரி இசி இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

Advertisement

களையெடுப்பது, மருந்து தெளிப்பது, பளுதூக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் விதத்தில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்ரி ஈசி இயந்திரத்தை பயன்படுத்தி 10 வேலையாட்கள் செய்யும் பணிகளை ஒரு நபரால் செய்ய முடியும். மேலும் களையெடுப்பதற்கு ஒரு ஏக்கருக்கு எட்டு ரூபாய் மட்டுமே செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்ணின் தன்மையை பொறுத்து இந்த இயந்திரத்தை ஐந்து மாறுபட்ட வேகங்களில் இயக்க முடியும் ஒரு முறை சாட் செய்வதன் மூலம் இந்த அக்ரி ஈஸி இயந்திரத்தை நான்கரை மணி நேரம் தொடர்ந்து இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement