இனி 8 மணிநேரம் தான்!! ரயில் பயணிகளுக்கு வெளியான அட்டகாசமான அப்டேட்!!

0
41
Vande Bharat train service to start on August 6!! Super news released!!
Vande Bharat train service to start on August 6!! Super news released!!

இனி 8 மணிநேரம் தான்!! ரயில் பயணிகளுக்கு வெளியான அட்டகாசமான அப்டேட்!!

நாட்டில் பல்வேறு போக்குவரத்துகள் மிகுந்து காணப்பட்டாலும், தொலைதூர பயணங்களுக்காக மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர்.

பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே ஏராளமான திட்டங்களை தினம்தோறும் செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில், தற்போது

நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வந்தே பாரத் ரயிலானது நீண்ட தூரம் செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயன்படுகிறது.

ஏனென்றால் மற்ற விரைவு ரயில்களில் ஆகும் பயண நேரத்தை விட இந்த அதிவேக வந்தே பாரத் ரயில்களில் பயண நேரம் குறைவாகவே இருக்கும்.

அந்த வகையில் தற்போது வந்தே பாரத் ரயிலானது சென்னையில் இருந்து டெல்லிக்கு இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதாவது, பிற ரயில்களில் பயணம் செய்து சென்னை வந்தடைய பதினொரு மணிநேரம் ஆகும். ஆனால் இந்த அதிவேக வந்தே பாரத் ரயிலில் எட்டு மணி நேரத்திலேயே சென்னைக்கு வந்தடையலாம்.

இந்த முடிவு தென் மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த முடிவால் தென் மாவட்ட மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

அதேபோல், இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது தெற்கு ரயில்வே மணடலத்தில் மட்டும் மூன்று வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

சென்னை-மைசூர், சென்னை-கோவை மற்றும் திருவனந்தபுரம்- காசர்கோடு ஆகிய மூன்று பகுதிகளில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை- நெல்லை மார்க்கத்திலும் இந்த வந்தே பாரத் ரயில்கள் இயக்க திட்டம் போடப்பட்டு வருகிறது.

இதற்கான் அறிவிப்பை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வெளியிட்டிருந்த நிலையில், திண்டுக்கல்- மதுரை- நெல்லை இடையே உள்ள ரயில் வழித்தடங்களை மேலும் 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்படி பலப்படுத்தப்படுகிறது.

அதாவது, சென்னை-கோவை செல்வதற்கு சாதாரண ரயிலில் 8 மணிநேரம் ஆகும் பட்சத்தில், வந்தே பாரத் ரயிலானது 5.30 மணி நேரங்களிலேயே சென்றடைகிறது.