மார்ச் 3 திருவிழா பக்தர்கள் 3500 பேருக்கு மட்டுமே அனுமதி! அரசு வெளியிட்ட அறிவிப்பு! 

0
223

மார்ச் 3 திருவிழா பக்தர்கள் 3500 பேருக்கு மட்டுமே அனுமதி! அரசு வெளியிட்ட அறிவிப்பு! 

ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார்  திருவிழாவில் பங்கேற்க தமிழக பக்தர்கள் 3500 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் கச்சத்தீவு அமைந்துள்ளது. புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து தங்களை பாதுகாக்கவும் பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபட்டுச் செல்வர். இவ்வாறு வழிபாடு செய்வதற்காக ராமேஸ்வரம் ஓலைக்குடாவை சேர்ந்த அந்தோணி பிள்ளை மற்றும் தொண்டியை சேர்ந்த சீனிகுப்பன் ஆகிய இருவரால் 1913 ஆம் ஆண்டு ஓலை குடிசையில் புனித அந்தோனியார் ஆலயம் நிறுவப்பட்டது.

இந்நிலையில் 1974 இல் காங்கிரஸ் அரசு இலங்கையுடன் செய்து கொண்ட  ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்க உரிமையும் வழங்கப்பட்டது. இதையடுத்து 2016 ஆம் ஆண்டு புதிய தேவாலயம் இலங்கை அரசால் திறக்கப்பட்டது.

ராமேஸ்வரத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கச்சத்தீவில்  ஒவ்வொரு ஆண்டும் இலங்கை அரசு அனுமதியுடன் யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறை மாவட்டம் சார்பில் திருவிழா நடத்த பெறுவது வழக்கம். இதையடுத்து இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் க.மகேசன் தலைமையில் புனித அந்தோனியார் திருவிழா ஏற்பாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்படி 2023 இல் மார்ச் 3,4  தேதிகளில் திருவிழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மார்ச்- 3 இல் விழா கொடி ஏற்றப்படுகிறது அன்றிரவு சிலுவை பாதை திருப்பலி பூஜையும் மறுநாள் மார்ச் – 4 இல் திருவிழா திருப்பலி பூஜையும் நடைபெற உள்ளது. எனவே இந்த விழாவில் பங்கேற்க தமிழக பக்தர்கள் 3500 பேருக்கும், இலங்கை பக்தர்கள் 4500 பேருக்கும் இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து மார்ச் 3 இல் கச்சத்தீவு புறப்படும் படகில் 3500 பக்தர்கள் செல்வர். மறுநாள் விழா முடிந்ததும் ராமேஸ்வரம் திரும்புவர்.  இதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை ராமேஸ்வரம் சர்ச் நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.