Connect with us

Breaking News

ஆன்லைன் ரம்மி தடை சட்டமசோதா இன்று தாக்கல்!! மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ஆளுநர் டெல்லிக்கு பயணம்!!!

Published

on

online-rummy-ban-bill-filed-today-state-bjp-president-annamalai-and-governor-travel-to-delhi

ஆன்லைன் ரம்மி தடை சட்டமசோதா இன்று தாக்கல்!! மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ஆளுநர் டெல்லிக்கு பயணம்!!!

சென்னை: தமிழ்நாடு சட்ட பேரவையில் கடந்த 20/3/2023 முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இன்று ஆன்லைன் ரம்மி தடை சட்டமசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ஆளுநர் ஆர் என் ரவி மற்றும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையும் டெல்லிக்கு சென்றது சர்ச்சையை உண்டாக்குகிறது.

Advertisement

ரம்மி தடை சட்ட மசோதா:

கடந்த ஜனவரி மாதம் நடப்பு ஆண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடரை ஆளுநர் தொடங்கி வைத்தார். அவர் உரையாடலில் அரசால் உருவாக்கம் செய்யப்பட்ட உரைகள் இடம் பெறவில்லை. மாறாக தமிழ்நாடு என்று கூறாமல் தமிழகம் என்று பேசியது அங்குள்ளவர்களுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஆளுநர் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

Advertisement

அதன் விளைவாக சட்ட சபையிலிருந்து அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை மாநில அரசுக்கு தடை செய்ய உரிமை இல்லை என்று திருப்பி அனுப்பி விட்டார். இப்பொழுது மீண்டும் இயற்றப்பட்டு தாக்கல் செய்யப்பட உள்ளது. இது குறித்து இன்று காலை 10 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் ஆளுநர் டெல்லி செல்கிறார்.

பாஜக தனித்து செயல்பட திட்டம்:

Advertisement

கடந்த சில மாதங்களாக கூட்டணிக்கட்சிகளாக திகழ்ந்த அதிமுக மற்றும் பாஜக இவறிற்கிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. பாஜக வில் உள்ள உறுப்பினர்கள் அதிமுக வில் இணைந்தது அண்ணாமலை அவர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இனிமேல் வரும் தேர்தலில் பாஜக தனித்து செயல்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் ஆளுநர் செல்லும் அதே நேரத்திற்கு டெல்லி சென்று டெல்லி மாநில தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி அவர்களையும் சந்தித்து கூட்டணி விவகாரம் , உட்கட்சி விவகாரம், தனித்து தேர்தலில் போட்டியிடுதல் குறித்து ஆலோசனை செய்யப்போவதாக கூறப்படுகிறது.

Advertisement