வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை

0
78

வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை.

இதுதொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

வெங்காய விளைச்சல் பகுதிகளில் வானிலை மாற்றங்கள் மாற்றங்கள் மற்றும் தொடர் மழை காரணமாகவும் ஏற்பட்டுள்ள வெங்காய விலை உயர்வு குறித்து தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தல்கள் படி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் தலைமையில் உயரதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் தலைமை செயலகத்தில் நடைப்பெற்றது.

இந்த கூட்டத்தில் 10 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக சில்லரை விற்பனையாளர்களும், 50 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக மொத்த விற்பனையாளர்களும், வெங்காயம் கையிருப்பு வைத்திருந்தாலும், அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் சென்னையில் உள்ள நுகர்பொருள் வழங்கல்துறை உதவி ஆணையர்கள் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுப் பணி மேற்கொள்ள வேண்டும் எனவும்,.

இதனை தொடர்ந்து,. வெங்காய விலை உயர்வை கட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு மகாராஷ்டிர மாநிலத்தில உள்ள நாசிக் பகுதியில் இருக்கும் வெங்காய மொத்த விற்பனை நிலையங்களில் தரமான வெங்காயத்தினை கொள்முதல் செய்திட தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய அலுவலர்கள் நாசிக்கு சென்றுள்ளனர்.

நாசிக் பகுதிகளில் கொள்முதல் செய்யப்படும் வெங்காயத்தினை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்திட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் மூலம் வெங்காய விலை உயர்வு கட்டுக்குள் கொண்டுவரப்படும் எனத் தெரிகிறது.

author avatar
Parthipan K