ஏப்ரல் 18 ஆம் தேதி 14 மணி நேரம் பண பரிவர்த்தனை செயல்படாது! ரிசர்வ் வங்கி வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

0
98
Online money transfer will not work for 14 hours on April 18! Sudden announcement by the Reserve Bank!
Online money transfer will not work for 14 hours on April 18! Sudden announcement by the Reserve Bank!

ஏப்ரல் 18 ஆம் தேதி 14 மணி நேரம் பண பரிவர்த்தனை செயல்படாது! ரிசர்வ் வங்கி வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

ரிசர்வ் வங்கி தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில் ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது,200000 லட்சம் பணம் அனுப்ப மக்கள் அதிகமாக பயன்படுத்துவது RTGS மற்றும் NEFT ஆகும்.அதும் ஆர்டிஜிஎஸ்யில் நீங்கள் பணத்தை ஒரு நபருக்கு அனுப்பினால் அது உடனடியாக அந்த நபரின் கணக்கு சென்றுவிடும்.ஆனால் என்இஎப்டி மூலம் பணம் அனுப்பினால் ஒரு மணி நேரம் கழித்த பிறகே அவர்களின் கணக்கு போகும்.அதனால் மக்கள் அதிக அளவு RTGS யை பயன்படுத்துகின்றனர்.

ஆனால் குறைந்தபட்சம் ரூ. 2 லட்சத்தைத் தான் ஆர்டிஜிஎஸ் மூலம் பணம் அனுப்ப முடியும். ஆனால்,நெப்ட் மூலம் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அனுப்பலாம்.ஆனால் நெப்ட் மூலம் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே பண பரிவர்த்தனை செய்ய முடியும்.அதுவும் ஓர் நாளுக்கு 9  கட்டங்களாக மட்டுமே பண பரிவர்த்தனை நடக்கும்.

பின்பு சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதிய 1 மணி வரை  பணம் பரிவர்த்தனை நடக்கும்.சனிக்கிழமை 5 கட்டங்களாக மட்டுமே பணம் பரிவர்த்தனை நடக்கும்.அந்தவகையில்,என்இஎப்டி NEFT மூலம் பணம் 9 மணிக்கு போடப்பட்டால் அப்பணம் ஓர் மணி நேரம் கழித்து 10 மணிக்கு தான் போட்டவரின் கணக்கு சென்றடையும்.ஆனால் ஆர்டிஜிஎஸ் RTGS யை பயன்படுத்தி பணம் பரிவர்த்தனை செய்தால் உடனுக்குடன் பணம் சென்றடையும்.

என்இஎப்டி மூலம் ரூ. 1 லட்சம் வரை அனுப்ப கட்டணம் ரூ. 5 பிளஸ் சேவை வரி.

ரூ. 1 முதல் ரூ. 2 லட்சம் வரை அனுப்ப கட்டணம் ரூ. 15 பிளஸ் சேவை வரி.

ரூ. 2 லட்சத்துக்கு மேல் அனுப்ப கட்டணம் ரூ. 25 பிளஸ் சேவை வரி.

ஆர்டிஜிஎஸ் மூலம் அனுப்ப ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை ரூ. 30 கட்டணம்.

ரூ. 5 லட்சத்துக்கு மேல் அனுப்ப கட்டணம் ரூ. 55 ஆகும்.

தற்போது ரிசர்வ் பேங்க் ஏப்ரல் 18 ஆம் தேதி 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் பண பரிவர்த்தனை நடைபெறாது என தெரிவித்துள்ளது.