ஆன்லைன் சூதாட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டாம்! 

0
104
Online Gambling Cancelled! Do not investigate in the Supreme Court!
Online Gambling Cancelled! Do not investigate in the Supreme Court!

ஆன்லைன் சூதாட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டாம்!

கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி சட்டப்பேரவையில் இணையதள விளையாட்டு தடை மசோதா முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தாக்கல் செய்தார்,முன்னதாகவே இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கடந்த 9 ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.

மேலும் உயர் நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.அந்த குழு கடந்த ஜூலை மாதம் அவர்களுடைய அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தனர்.

அதன் பிறகு தான் ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பாக அவசர சட்டம் இயற்றப்பட்டது.அதில் ஆன்லைன் ரம்மி ,போக்கர் போன்ற இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஜங்லி கேம்ஸ் ,ப்ளே கேம்ஸ் ,ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.அதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக தமிழக அரசு இயற்றிய சட்டத்தை ரத்து செய்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி உத்தரவிடப்பட்டது.

அந்த உத்தரவுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் எதிர்மனுதாரர்களான ஆன்லைன் ரம்மி மற்றும் விளையாட்டு நிறுவனங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஆன்லைன் ரம்மி .விளையாட்டு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுவில் ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் தற்போது இரண்டாவது அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த விவாகரத்தில் தமிழக அரசு முதலாவதாக கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக இந்த மேல்முறையீட்டு மனுவின் காலம் முடிந்து விட்டது.அதனால் இதனை உச்ச நீதிமன்றம் விசாரணை செய்ய தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K