ஆபாச சைட்களா?ஆன்லைன் வகுப்புகளா?தொடரும் குழப்பம்

0
88


கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் முடங்கி இருக்கும் இந்த தருணத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. எனவே இச்சமயத்தில் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு பொதுவான வழிகாட்டு தளமாக அமைந்திருக்கிறது.
என்னதான் இக்காலத்தில் இணையமும் தொழில்நுட்பமும் நமக்கு ஒரு பக்கம் நற்பயன்களை கொடுத்தாலும் அதில் நிறைய பக்க விளைவுகளும் உள்ளன.
அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவன தலைவர் ராஜேஸ்வரி பிரியா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தற்போது ஆன்-லைன் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.. எல்லாவற்றையும் விட மிக முக்கியமான பிரச்சனை ஆபாச இணையத்தளங்கள் தடை செய்யப்படாமல் ஆன்-லைன் வகுப்பு நடத்தப்படுவது… அதனால் மாணவர்கள் தடம் மாற வாய்ப்பு உள்ளது.
தொலைக்காட்சி வழியாக தனியார் பள்ளிகளும் பாடங்கள் நடத்த அரசு வழிவகை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு வரை கண்டிப்பாக ஆன்-லைன் கல்வி தடை செய்யப்பட . மாணவர்களின் எதிர்காலம் கல்வியை மட்டும் சார்ந்தது அல்ல. ஒழுக்கத்தையும் சார்ந்தது’ என்று கூறியுள்ளார்.

ஆபாச சைட்டுகள்
மற்றொன்று ராஜேஸ்வரி பிரியா சொல்வதுபோல், ஆபாச வெப்சைட்களுக்கு தடை விதிக்காமல், ஆன் லைன் கிளாஸ் நடத்தினால் மாணவர்கள் தடம் மாற வழி வகுக்க செய்யும் என்பதையும் மறுக்க முடியாது. கடந்த வருடம் ஏடிஜிபி ரவி, ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார்.. ஆபாச படம், வீடியோக்களை, மொபைல் போன், லேப்டாப்களில் வைத்திருப்பதும், அது சம்பந்தப்பட்ட லிங்க்குகளை பதிவிறக்கம் செய்வதும் சட்டப்படி குற்றம்தான்.3 முதல் 7 வருஷம் வரை இவர்களுக்கு ஜெயில் தண்டனை கிடைக்கும்’ என்று ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.
தடை விதிக்க வேண்டும்
இனி மாணவர்களுக்கு ஆன்லைன் கிளாஸ்தான் என்று முடிவாகிவிட்டால் அவர்கள் ஆன்லைனில் அதிக நேரம் செலவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்போது, நிச்சயம் அவர்கள் தடம் மாற வாய்ப்புகளும் நிறைய உள்ளன. பெற்றோர்களும் எந்நேரமும் இதை கண்காணித்து கொண்டிருக்க முடியாது. எனவே சிதறி கிடக்கும் ஆபாசங்களை ஒழிக்க ஏதாவது நடவடிக்கை எடுத்தால் பிள்ளைகள் தடம் மாறாமல் இருப்பார்கள்!

author avatar
Parthipan K