கிடுகிடுவென உயரும் வெங்காய விலை..! அதிர்ச்சியில் மக்கள்!

0
73

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது.

தமிழகத்திற்கு கா்நாடகம், ஆந்திரா, மராட்டியம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், தற்போது அங்கு பெய்து வரும் தொடர்மழை காரணமாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிலோ பெரிய வெங்காயம் ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளி மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக வெங்காய சாகுபடி பாதித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு வரும் வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாகவே வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாக வெங்காய வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வழக்கமாக தீபாவளி பண்டிகை நாட்களில் தான் வெங்காய விலை அதிகரிக்கும். தற்போது 20 நாட்கள் முன்னபாகவே அதிகரித்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. மேலும், ஜனவரி மாதத்திற்கு பிறகு தான் வெங்காய விலை குறையும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பண்டிகை காலங்களில் வெங்காய தேவை அதிகரிக்கும் என்பதால் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

author avatar
Parthipan K