அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் ஓர் ஆண்டுகாலம் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை! தமிழக அரசின் அடுத்த அதிரடி!

0
117
One year paid maternity leave for all government female employees! Tamil Nadu government's next action!
One year paid maternity leave for all government female employees! Tamil Nadu government's next action!

அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் ஓர் ஆண்டுகாலம் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை! தமிழக அரசின் அடுத்த அதிரடி!

தமிழ்நாட்டில் பெண்களின் மகப்பேறு காலத்தை உணர்ந்து அரசு ஊழியர் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளித்து வந்தனர்.இதில் பல பாரபட்சங்கள் நடந்து வருவதாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது.அந்தவகையில் தற்காலிக பணியில் இருக்கும் அரசு ஊழிய பெண்களுக்கு மாத ஊதியத்துடன் விடுப்பு அளிக்காமல் இருந்தது.அவர்களுக்கும் நிரந்தர பணியில் இருப்பவர்கள் போன்றே விடுப்பு அளிக்குமாறு 2020 ஆம் ஆண்டு உத்திரவிடப்பட்டது.ஆனால் தற்போது வரை அது அமலுக்கு வரவில்லை.

முதன் முதலில் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு 180 நாளாக இருந்தது.அதனையடுத்து அதனை அதிகரித்து 270 நாளாக விடுப்புடன் ஊதியம் என்று கூறினர்.ஆனால் இச்சலுகை அனைத்தும் நிரந்தரமாக பணியில் இருப்பவர்களுக்கு மட்டுமே என்பது போல இருந்தது.அதனால் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜகுரு என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு பதிவு செய்திருந்தார்.அதில் அவர் கூறியது,தமிழகத்தில் உள்ள மருத்துவ துறைகளில் தற்காலிக பணியிலிருக்கும் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரை நிலுவையில் உள்ளது.அத்தகைய தற்காலிக பணியாளர்களுக்கு விடுப்பு அளிக்குமாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கானது கடந்த மாதம் 8 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.மகப்பேறு விடுப்பு அளிப்பதில் பாரபட்சமின்றி அனைவருக்கும் சாமான நிலையே உள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.மேலும் தற்காலிக பணி புரிபவர் மற்றும் நிரந்தர பணியாளர் என்று எந்தவித பாகுபாடும் இல்லை என்றும் கூறியிருந்தார்.மேலும் அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு மகப்பேறு விடுமுறை நாளை 270 நாட்களிலிருந்து 1 வருடமாக அதிகரித்து அரசானை பிறப்பித்துள்ளது என கூறினார்.அரசு தரப்பு வழக்கரியர் கூறிய வாதத்தை பதிவு செய்து தலைமை நீதிபதிகள் இவ்வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.