அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து ஒருவர் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

0
108
#image_title

அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து ஒருவர் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

கடலூர் சங்கொலிக்குப்பத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கடந்த ஆண்டு மே மாதம் கடலூர் ஏணிக்காரன் தோட்டம் பகுதியில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.அந்த காப்பகத்தில் இருந்தவர்கள் விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் கூடுதல் வசதிகள் இருப்பதால் அங்கு மாற்றுவதற்கு உறவினர்களின் ஒப்புதல் கேட்டுள்ளனர்.

உறவினர்கள் ஒப்புதலுடன் ஜெயக்குமார் விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டார். ஆனால் அதன் பிறகு ஜெயக்குமாரை பற்றிய எந்த ஒரு தகவலும் இல்லை.ஜெயக்குமார் வாணியம்பாடியில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வாணியம்பாடி காப்பகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17ஆம் தேதி ஜெயக்குமார் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயக்குமாரின் சகோதரர் கிருஷ்ணமூர்த்தி கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு தற்போது உத்தரவிட்டுள்ளார்.இதனால் அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வழக்கினை கடலூர் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Savitha