பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் 1 சவரன் தங்கம்! இந்த எண்ணிற்கு அழைத்து பெற்றுக்கொள்ளலாம்! அதிரடி  உத்தரவு!

0
73
One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!
One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் 1 சவரன் தங்கம்! இந்த எண்ணிற்கு அழைத்து பெற்றுக்கொள்ளலாம்! அதிரடி  உத்தரவு!

மாணவ மாணவிகளுக்கு பல நலத் திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது. தற்பொழுது கூட கொரோனா தொற்று  காரணத்தினால் சில மாணவர்களால் ஆன்லைன் வகுப்பு பயில முடியவில்லை. அவ்வாறு உள்ள மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு ஏற்பட்டுள்ளது. அந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை சக மாணவர்களுடன் கற்றல் திறனை வளர்க்க தற்பொழுது தமிழக அரசு வீடு தேடி கல்வி என்ற திட்டத்தை கொண்டு வர உள்ளது. இத்திட்டத்தை முதல்வர் இன்று தொடங்க உள்ளார். இத்திட்டம் ரூ 200 கோடி செலவில் தயார் செய்துள்ளனர். இத்திட்டத்தை 12 மாவட்டங்களில் ஆரம்பிக்க உள்ளனர்.

இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு ஆடல் , பாடல் , நாடகம் , பொம்மலாட்டம் போன்றவை மூலம் புதுமையான முறையில் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப்படும். அந்தவகையில் மாணர்கள் கற்கும் பொழுது எளிதாக புரிந்து கொள்ள முடியும். மேலும் வருடம் தோறும் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாடுபொது நிர்வாகி, அறங்காவலர் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி தற்போது தரப்படுகிறது.

அவ்வாறு கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 80 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், பொறியியல் படிப்பில் முதல் ஆண்டில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் இந்த நிதி உதவி வழங்க உள்ளனர். மேலும் முன்னாள் படைவீரர் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கும் இந்த  நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு சவரன் தங்க  வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.2019 முதல்  2021 வரை இந்த நிதி உதவி பெறுவதற்கு தகுதியுடைய மாணவ, மாணவிகள் இம்மாதம் முப்பத்தி ஒன்றாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் விண்ணப்பிப்பது ஏதேனும் சந்தேகம் இருப்பின் 0427 290290 என்ற எண்ணுக்கு அழைத்து ,கேட்டுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.