மனுவை விசாரிக்கும் உயர் நீதிமன்றம்! பலிக்குமா முக்கிய கட்சியின் கனவு!

0
60

பாஜக சார்பாக நடத்தப்படும் இருக்கின்ற வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக மாநில மற்றும் மத்திய அரசுகள் ஊரடங்கு அறிவித்து இருக்கிறார்கள் அது இந்த மாதம் கடைசிவரை நீட்டிக்கப்பட்டு இருக்கின்றது.

ஆணை வரும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த நிலையில் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் மாதம் ஆறாம் தேதி முதல் டிசம்பர் மாதம் ஆறாம் தேதி வரை மேல் யாத்திரை நடத்த உள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் அறிவித்திருக்கின்றார்.

இந்த யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னையை சேர்ந்த பத்திரிக்கையாளர் பாலமுருகன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

அந்த மனுக்களில் நோய்தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு காரணமாக மொகரம் விநாயகர் சதுர்த்தி போன்ற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இப்போது மாநிலம் முழுவதும் ஒரு மாத காலம் யாத்திரையின் நடத்தும்போது 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரை உடன் செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதால் நோய் தொற்று அதிகமாக பரவும் அபாயமும் இருப்பதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்து பெண்கள் சம்பந்தமாக தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வந்ததை எடுத்துக் காட்டி இருக்கும் மனுதாரர்கள், அதேபோன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினை இப்போதும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அந்த மனுவில் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த யாத்திரைக்கு அனுமதி கொடுக்கப்பட்டால் குருநாதரை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு மருத்துவர்கள் பல துறை ஊழியர்கள் ஆகியோர் எடுத்துவரும் அனைத்து நடவடிக்கைகளும் முயற்சிகளும் நீர்த்துப்போகும் எனவும் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த யாத்திரை முடியும் நாளான டிசம்பர் ஆறாம் தேதி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என்றும் அதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் அபாயம் இருப்பதாகவும், அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதிகள் சத்தியநாராயணன், மற்றும் ஹேமலதா, அடங்கிய அமர்வின் முன்பு மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் செந்தில் குமாரின் மனுவை வியாழக்கிழமை அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்திருக்கின்றார்கள்.