ஒருநாள் கிரிக்கெட் போட்டி சலிப்பு!! சச்சினின் புதிய யோசனை!!

0
157
#image_title

ஒருநாள் கிரிக்கெட் போட்டி சலிப்பு!! சச்சினின் புதிய யோசனை!!

கிரிக்கெட்டின் தாயகம் எனப்படும் இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டிகள் துவங்கிய காலகட்டத்தில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும், காலப்போக்கில் பல்வேறு மாறுதல்களுடன் வடிவமைக்கபட்டு பின்னாளில் சுவாரஸ்யம் மிகுந்த வடிவில் ஆட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, பல வீரர்கள் தங்களது திறமையை நிருபித்தனர்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் என்றாலே சில வீரர்கள் மட்டுமே நினைவுக்கு வரும் நிலையில், ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. இந்நிலையில் காலபோக்கில் மீண்டும் ஒருநாள் போட்டிகளில் சுவாரஸ்யம் குறைய தொடங்கியது.

இதனையடுத்து இந்தியாவில் ஐபிஎல் எனப்படும் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் துவங்கபட்டதும், சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான விறுவிறுப்பு குறைய தொடங்கியது. இதன் பின் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐபிஎல் போன்று, இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க முடிவு செய்துதது.

இதனையடுத்து ரசிகர்களிடையே பெறும் வரவேற்ப்பை பெற்ற இருபது ஓவர் உலககோப்பை போட்டிகள் நடத்தப்பட்டு, ஒருநாள் போட்டிகளுக்கான சுவாரஸ்யம் வெகுவாக குறைய தொடங்கியது.

இந்த நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் சுவாரஸ்யம் ரசிகர்களிடையே குறைந்து வருவதை ஆட்டம் விறுவிறுப்பாக செல்லும் வகையில் சில யோசனைகளை தெரிவித்துள்ளார்.

அதன் படி ஐம்பது ஓவர் கொண்ட போட்டிகளில் முதல் இருபத்தைந்து ஓவர்களை ஒரு அணியும், அடுத்த இருபத்தைந்து ஓவர்களை மற்றொரு அணியும் விளையாட வேண்டும், மீதி உள்ள ஐம்பது ஓவர்களையும் இதே போல இரண்டாக பிரித்து விளையாடி வந்தால் அதிகபடியான சுவாரஸ்யம் ரசிகர்களை மட்டுமல்ல வீரர்களையும் உற்ச்சாகப்படுத்தும், ஆட்டம் விறுவிறுப்படையும் என்று யோசனை கூறியுள்ளார்.

சச்சினின் இந்த யோசனையை ஐசிசி எனப்படும் உலக கிரிக்கெட் கவுன்சில் ஏற்றுக்கொள்ளுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.