புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்!! அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

0
136
#image_title

புதுச்சேரிக்கு புகழ்சேர்த்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட தமிழறிஞர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நாட்டின் விடுதலைக்கும், தமிழ் மொழியின் மீது உள்ள தீவிர பற்றின் காரணமாக பாரதிதாசன் எழுதிய பாடல்களால் “புரட்சிக்கவிஞன்” என போற்றப்பட்டார்.

புதுச்சேரியில் பிறந்து புதுச்சேரிக்கு வந்த மகாகவி பாரதியாரின் கவிதைகளில் ஈர்த்து கனகசுப்ரத்தினம் என்ற தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டவர். அவர் எழுதிய “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” என்ற பாடல் புதுச்சேரி மாநில தமிழ் தாய் வாழ்த்தாக பாடப்படுகின்றது.

அவ்வாறு தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 133வது பிறந்த நாளையொட்டி ஆளுநர் மாளிகை அருகேவுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்புல் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பாரதிதாசனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், தமிழறிஞர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புஸ்சி ஆனந்த், விஜய் உத்தரவின் அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தி வருவதாக தெரிவித்த அவர் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுமா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றார்.

author avatar
Savitha