பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வன்னியர்கள் கடிதம் அனுப்பி போராட்டம்!

0
141
#image_title

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வன்னியர்களுக்காக கொடுக்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழ்நாடு அரசு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நிறைவேற்ற கோரி முதல்வர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி போராட்டம்.

தமிழ்நாட்டில் கடந்த 2020- 21 ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கங்கள் போராடி பெற்றது 10.5 சதவீத ஒதுக்கீடு ஆகும்.

இதற்கு அப்போதே உயர்நீதிமன்றம் தடை விதித்தது ஆனால் இதனைத் தொடர்ந்து பின்னர் உச்ச நீதிமன்றம் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க எந்த ஒரு தடையும் இல்லை என்று தீர்ப்பளித்து அவ்வாறாக தீர்ப்பளிக்கப்பட்டு ஓராண்டிற்கு மேலாகியும் எங்களுக்கான உரிமைகள் வழங்க தமிழக அரசு காலதாமதம் செய்து வருவதாகவும்.

மேலும் இந்த கல்வியாண்டில் வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு மே 31ம் தேதிக்குள் நிறைவேற்றி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று தேனி மாவட்டம் பெரியகுளம் பாட்டாளி மக்கள் கட்சியின் நகரச் செயலாளர் முத்தையா தலைமையில் தங்களது கோரிக்கைகளை கடிதம் வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் நீதி அரசர் பாரதிதான் அவர்களுக்கும், பெரியகுளம் முத்துராஜா தெரு, வன்னியர் தெரு, அண்ணா தெரு, வாகம்படி புறவீதி, உள்ளிட்ட பகுதியிலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தோர் கடிதம் அனுப்பினர்.

இந்த கடிதம் அனுப்பும் நிகழ்ச்சியில் பெரியகுளம் நகர்மன்ற உறுப்பினர் குமரன், உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடிதங்களை தபால் பெட்டியில் செலுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.