ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 42 ஊழியர்களுக்கு புதிய வகை நோய் தொற்று அறிகுறி!

0
67

கடந்த 2019 ஆம் வருடம் சீனாவில் கண்டறியப்பட்ட நோய்தொற்று அதன் பிறகு உலக நாடுகளில் சுமார் 200க்கும் அதிகமான நாடுகளுக்கும் பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியது, இதனால் பல நாடுகள் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தனர்.

அத்துடன் கோடிக்கணக்கான உயிரிழப்பையும் சந்தித்தனர், இன்னும் சொல்லப்போனால் பல முக்கிய நபர்கள் இந்த நோய் பாதிப்பால் உயிர் இழந்துபோனார்கள்.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்குள் நுழைந்த இந்த நோய்த்தொற்று தற்சமயம் வரையில் நீடித்து வருகிறது, இந்த நோயினை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மத்திய, மாநில, அரசுகளின் நடவடிக்கைக்கு ஆரம்பத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்காமல் இருந்தாலும் தற்சமயம் மத்திய, மாநில, அரசுகளுக்கு நன்றாக ஒத்துழைப்பு வழங்க தொடங்கி விட்டார்கள். அதனால் மத்திய, மாநில, அரசுகள் சற்றே சிரமம் இன்றி தங்களுடைய வேலையை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தடுப்பூசி போடும் பணியும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது, அதிலும் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி மிக விரைவாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை நோய் தொற்றான ஒமைக்ரான் பெற்று உலக நாடுகளுக்கு தற்சமயம் பரவி வருகிறது. இந்த நோய்த்தொற்று இந்தியாவிலும் பரவி இருக்கிறது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இந்த நோய்த்தொற்று பரவியிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் 34 பேருக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 17ஆம் தேதி ஒரு நபருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்த நோயாளிக்கு கொரோனா தொற்று இருப்பது அதன் பிறகு உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அந்த வார்டில் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர் மாணவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், என்று கடந்த 17ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் 68 பயிற்சி மருத்துவர்கள், 227 செவிலியர் மாணவிகள், 60 துப்புரவு பணியாளர்கள், உட்பட 3370 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 39 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 60 ஆக அதிகரித்திருக்கிறது.

இந்த 60 பேரில் 7 பயிற்சி மருத்துவர்கள், 7 நர்சிங் மாணவிகள், செவிலியர்கள், 1 முதுகலை மருத்துவப் படிப்பு மாணவர், 1 துப்புரவு பணியாளர் அந்த கட்டிடத்தில் சிகிச்சை பெற்ற 23 நோயாளிகள் என்று ஒட்டுமொத்தமாக 42 பேருக்கு புதிய வகை நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து இந்த 42 பேரின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக புனே மற்றும் ஐதராபாத்தில் இருக்கின்ற ஆய்வகங்களுக்கு மரபணு பரிசோதனை காரணமாக, அனுப்பப்பட்டிருக்கிறது.