20 நாடுகளில் 200க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் பாதிப்பு!

0
158

கொரோனாவின் உருமாறிய நோய் தொற்றான ஒமிக்ரான் தென்ஆப்பிரிக்காவில் ஆரம்பித்து தற்போது உலக நாடுகளில் கால் பாதித்து இருக்கின்றது. இந்த 150 உரு மாற்றங்களை தன்னிடம் கொண்டிருப்பதால் மோசமான ஒன்று என விஞ்ஞானிகள் கவலை அடைந்து இருக்கிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஒமிக்ரான் வைரஸ் தற்சமயம் 20 நாடுகளில் 226 பேருக்கு உறுதியாக இருப்பதாக அமெரிக்க நோய்த்தொற்று நிபுணர் ஆண்டனி பாசி கூறியிருக்கிறார், இதுகுறித்து ஆண்டனி பாசி தெரிவிக்கும்போது, இது டெல்டா போன்ற பிற வகை வைரஸ்களில் இருந்து வித்தியாசமான உரு மாற்றங்களை கொண்டு இருக்கிறது. ஆனாலும் இது மிகவும் பரவக்கூடியதா என்பதை தீர்மானிப்பது கடினமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.