வாகன ஓட்டிகளுக்கு ஆறுதல் வழங்கிய பெட்ரோல் டீசல் விலை!

0
49

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சர்வதேச விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரலாறு காணாத நிலையில் உயர்ந்து இருந்தது. இதன் காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் சூழல் உண்டானது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது, கடந்த நவம்பர் முதல் வாரத்தில் கலால் வரி குறைக்கப்பட்டது.

அதற்குப் பிறகு 85 தினங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வந்தது. எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டு இருக்கின்ற அறிவிப்பின் அடிப்படையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 91 ரூபாய் 43 காசுக்கும், விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 7 வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் அதிகரித்து இருக்கிறது, ஒரு பேரலின் விலை 90 டாலருக்கும் மேல் அதிகரித்து அனைவரும் அதிரும்படி செய்திருக்கிறது. கடந்த 2014ஆம் வருடத்திற்கு பின்னர் இந்த அளவுக்கு கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து இருப்பது இதுவே முதல் முறையாக இருக்கிறது.

நோய்தொற்று கட்டுப்பாடுகளுக்கு முன்பு அதற்கு நிகராக கச்சா எண்ணெய் பயன்பாடு உயர்வும் விலை அதிகரிப்புக்கு ஒரு காரணமாக இருக்கிறது.. ஆனாலும் நேற்று கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்தது, சர்வதேச சந்தையில் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் செய்யப்படாத வாகன ஓட்டிகளுக்கு சற்று நிம்மதியை கொடுத்தது.

இருந்தாலும் 5 மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டுதான் எரிபொருள் விலையை மத்திய அரசு ஏற்றாமல் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.