மாட்டிக் கொள்ளப் போகிறோம் என அறிந்து திமுகவுக்கு ஐஸ் வைக்கும் ஓபிஎஸ்! ஆளுங்கட்சியை  தொடர்ந்து புகழாரம் சூட்டும் பன்னீர்செல்வம்!

0
54
OBS who puts ice on DMK knowing that they are going to get caught! Panneerselvam praises the ruling party!
OBS who puts ice on DMK knowing that they are going to get caught! Panneerselvam praises the ruling party!

மாட்டிக் கொள்ளப் போகிறோம் என அறிந்து திமுகவுக்கு ஐஸ் வைக்கும் ஓபிஎஸ்! ஆளுங்கட்சியை  தொடர்ந்து புகழாரம் சூட்டும் பன்னீர்செல்வம்!

தற்பொழுது திமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்த உடன் அவர்கள் அறிக்கையில் கூறிய அனைத்து செயல்களையும் படிப்படியாக நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது செய்த ஊழல்களை வெளிக் கொண்டு வருவதாகவும் கூறினாள். அப்படிப் பார்க்கும் பொழுது இரு தினங்களுக்கு முன்பு செந்தில் பாலாஜி 2.37 டன் நிலக்கரி காணவில்லை என்று புகார் அளித்தார். மட்டுமின்றி குடிசை மாற்று வாரியம் பகுதிகளுக்கு குடியிருப்புகளை கட்டி தந்ததில் அந்த கட்டிடங்கள் உதிரும் நிலையில் உள்ளதாக ஓ பன்னீர் செல்வத்தின் மீது அந்த ஊழல் திரும்பியது.

அதுமட்டுமின்றி படிப்படியாக அதிமுக அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக மாற்றி வருவதால் அதிமுக தலைமை கதிகலங்கி காணப்படுகிறது. திமுகவின் அடுத்த டார்கெட் ஆக ஓ பன்னீர்செல்வம் மற்றும் கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சிக்க உள்ளனர். இதில் இருந்து தப்பிப்பதற்கு தற்பொழுது ஓபிஎஸ் எடுத்த ஆயுதம் தான் திமுகவின் புகழாரம் சூட்டுவது.தற்பொழுது திமுக அரசு கலைஞருக்கு நினைவிடம் கட்ட போகிறது என்று கூறினர்.

அவர்கள் ஓபிஎஸ் கோரியது, கலைஞருக்கு நினைவிடம் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி என சட்டப்பேரவையில் கூறினார்.இந்த நினைவிடம் கட்டுவதன் மூலம் கலைஞரின் பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கும் என கூறினார். அதுமட்டுமின்றி கலைஞர் நினைவிடம் கட்டுவதை அதிமுக அரசு முழு மனதோடு வரவேற்கிறோம் என்று கூறினார். 50 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்தான் கருணாநிதி அவ்வாறு இருந்தபோது பல்வேறு புதிய சட்டங்களை கொண்டு வந்து மக்களுக்கு நன்மை செய்து உள்ளார் என்று ஓபிஎஸ் புகழாரம் சூட்டினார்.

அதேபோல எனது தந்தை கலைஞரின் தீவிர பக்தர் அவர் வைத்திருக்கும் பெட்டியில் பராசக்தி மனோகரா படத்தின் வசனங்களில் இருக்கும் என்று கூறினார். தந்தை இல்லாத நேரத்தில் அவரது பெட்டியை திறந்து அந்த கதைகளை நாங்கள் எடுத்து படித்து உள்ளோம் என்றும் தெரிவித்தார். தற்போது கட்டப்படும் அவரது நினைவிடத்தில் அவரது சிறப்புகள் அடங்கிய ஓர் தொகுப்பை அங்கு வைக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் ஆளும் கட்சியிடம் கோரிக்கை கேட்டார். பல சிறப்பு வாய்ந்த சட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தவர் என்று தொடர்ந்து கலைஞர் புகழாரம் சூட்டி வந்தார்.