இந்த மாமனிதரால் தான் இந்தியா மீது ஈர்ப்பு வந்தது என்கிறார் ஒபாமா – அந்த மனிதர் யார் தெரியுமா?

0
69

ஒபாமா தனது வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக எழுதியுள்ளார். அந்த நூலுக்கு “ஏ பிராமிஸ்டு லேண்டு” என்று பெயரிட்டுள்ளார். அந்த நூலில், அவர் இந்தோனேஷியாவில் வளர்ந்தபோது ராமாயண கதைகள் மற்றும் மகாபாரத கதைகள் போன்ற தமிழ் கதைகளை கேட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமன்றி இந்தியாவின் சிறப்பம்சங்களை கூறியுள்ளார். அது என்னவென்றால், ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகையையும், இரண்டாயிர இனக் குழுக்களையும், அதுமட்டுமின்றி, ஏழுநூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளையும் கொண்டுள்ள ஒரே நாடு இந்தியா என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியாவிற்கு ஆதரவாக மகாத்மா காந்தி அகிம்சை வழி போராட்டத்தை நடத்தியது குறித்தும் குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழ்ந்ததாக சுட்டிக்காட்டிய அவர் இவை அனைத்தின் காரணத்தால் மகாத்மா காந்தி மீது தனக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, தனது குழந்தை பருவத்தில், இராமாயணம் மற்றும் மகாபாரதம் கதைகளை கேட்டது குறித்தும், மகாத்மா காந்தியின் மீது ஏற்பட்ட பற்று காரணத்தால் இந்தியா மீது ஈர்ப்பு வந்துள்ளது என்பதையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K