ஆளுங்கட்சி சொல்வது ஒன்று செய்வது ஒன்று! கடும் கோபத்தில் தமிழக மக்கள்!

0
65

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் மூன்று நாட்களுக்கு முன்னர் திமுக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2,900 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கரும்பு விவசாயிகளை இந்த அறிவிப்பு சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் கூறியிருக்கிறார்.

விவசாயிகள் டன் ஒன்றுக்கு5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்ற சூழ்நிலையில், சென்ற 2020-21 உள்ளிட்ட ஆண்டு அரவை பருவத்துக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்த விலையான கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2 , 207 ரூபாய் 50 காசு என்பதுடன் உற்பத்தி ஊக்கத்தொகையாக 42 ரூபாய் 50 காசு மற்றும் சிறப்பு ஊக்கத் தொகையாக 150 என்று ஒட்டுமொத்தமாக 192 ரூபாய் 50 காசு தமிழக அரசால் வழங்கப்படும் என்றும் இதன் மூலமாக கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 900 ரூபாய் கிடைக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சமயத்தில் கரும்புக்கு டன்னுக்கு 3500 ரூபாய் வழங்க படவேண்டும் என்று தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று எட்டு மாதங்களுக்கு முன்னர் தேர்தல் அறிக்கையின் மூலமாக வாக்குறுதி வழங்கியவர், தற்சமயம் ஆட்சிக்கு வந்த பிறகு 2 ஆயிரத்து 900 ரூபாய் என்று அறிவிப்பது கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும் என்று தெரிவித்திருக்கிறார். சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்ற அளவில் திமுகவின் செயல்பாடு உள்ளது இதற்கு அதிமுக தரப்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியிருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சமயத்தில் தெரிவித்ததையும், முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் செய்வதையும் ஒப்பிட்டு அதனை அரசுக்கு சுட்டிக்காட்டி நினைவுபடுத்துவதும், அதனை நிறைவேற்ற வலியுறுத்துவதும், எதிர்க்கட்சியின் கடமை அதனடிப்படையில் முதலமைச்சரின் கவனத்திற்கு இதனைக் கொண்டு செல்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

முதலமைச்சர் இதில் உடனடியாக நேரடியாக தலையிட்டு குறைந்தபட்சம் தேர்தல் வாக்குறுதியான கரும்புக்கு ஆதார விலையை டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதையாவது நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டும் என கரும்பு விவசாயிகள் சார்பாகவும், அதிமுகவின் சார்பாகவும், வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டால் அவர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த எதையுமே முழுமையாக நிறைவேற்றவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் பாதி வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று இந்த அரசு மார்தட்டிக் கொள்கிறது.

ஆட்சிக்கு வந்தவுடன் ஏதோ பெயருக்கு ஒரு சில திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி விட்டு முக்கிய திட்டங்களை கிடப்பில் போட்டு விட்டது திமுக அரசு இதனால் பொதுமக்கள் கடுமையான கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.