பொங்கல் பரிசு தொகுப்பு இது நியாயமா? தமிழக அரசை கேள்வி எழுப்பிய ஓபிஎஸ்!

0
63

தமிழ்நாட்டில் இருக்கின்ற நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு இருக்கின்ற பொருட்கள் தர்மதுரை உள்ளது. அனைவருக்கும்21 பொருட்கள் கிடைக்கவில்லை. அனேக கடைகளில் 5 முதல் 6 பொருட்கள் குறைவாக உள்ளது. ஒரு சில பகுதிகளில் துணிப்பை கொடுப்பதில்லை என்று ஆங்காங்கே பொதுமக்கள் குறை தெரிவித்து வருகிறார்கள், அது போன்ற காட்சிகளை சமூகவலைதளங்களில் பார்க்க முடிகிறது என்று தெரிவித்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் ஒரு சில பகுதிகளில் இருக்கின்ற நியாயவிலை கடைகளில் வழங்கிய வெள்ளம் பாகு போல் உருகி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் ஓபிஎஸ்.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு இந்த மாதம் 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் வழங்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தவிர்க்க இயலாத ஒரு சில காரணங்களால் பொங்கல் தொகுப்பை பெற இயலாதவர்கள் இந்த மாதம் 31ம் தேதி வரையும் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எதன் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆனால் தற்போது இருக்கக்கூடிய நடைமுறை எதனை அடிப்படையாகக் கொண்டு என்ற திட்டம் தொடங்கப்பட்டதோ அந்த நோக்கத்தை சிதைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

ரொக்கமாக இருந்தால் கடன் வாங்கி பொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு அதன் பிறகு அதை திருப்பி கொடுத்து விடலாம் ஆனால் தற்சமயம் திமுக ஆட்சியில் கொடுக்கப்படுவது வெறும் பரிசுப்பொருள் தொகுப்பு அதை வைத்து என்ன செய்ய இயலும்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ஓபிஎஸ்.

ஆகவே இதில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி பொங்கல் பண்டிகைக்கு முன்பே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து பொருட்களும் நல்ல விதத்தில் கிடைக்கவும், ஏற்கனவே வாங்கிய தொகுப்பில் குறைபாடு இருந்தால் அதனை சரி செய்யவும், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.