இதைச் செய்யவில்லை என்றால் அது நிச்சயம்! எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்!

0
50

நோய் தொற்ற பரவல் இந்தியாவில் தொடங்கியதிலிருந்து தற்போது வரையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் மிகத் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மருந்தே இல்லை என்ற சூழ்நிலையில், இந்தியா உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது.

இதனை கவனித்த அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் அந்தந்த நாடுகளில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்கள். இதனை தொடர்ந்து நோய்த்தொற்று பரவலுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவில் அதற்கான பரிசோதனையிலும் வெற்றி பெற்றது. இதனை அடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.தற்போது வரையில் தடுப்பூசி போடும் தீவிரமானது தொடர்ந்து கொண்டே தான் வருகிறது.

இந்தநிலையில், அடுத்த ஒரு மாதத்திற்குள் எல்லோரும் தானாக முன்வந்து தடுப்பூசிகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தமிழ்நாட்டில் சுமார் 22 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி சலித்துக் கொள்ளாமல் உள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்திருக்கிறார்.

நாடு முழுவதும் நோய் தொற்று பரவல் இரண்டாவது அலை மிகத்தீவிரமாக தற்போது பரவி அது கட்டுக்குள் வந்திருக்கிறது. இருந்தாலும் கர்நாடகா, கேரளா, உள்ளிட்ட பல மாநிலங்களில் நோய்த்தொற்று பரவல் மறுபடியும் அதிகரித்து வருகின்றது. இருந்தாலும் தமிழ்நாட்டில் இரண்டாவது அலை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதேபோல மூன்றாவது அலை இந்த வருடத்தின் இறுதியில் உச்சகட்டத்தை அடைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற காரணத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தும் பணியில் தமிழக அரசு மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தடுப்பூசி வாங்குவதில் தமிழக அரசு தீவிரமாக இருந்து வருகிறது சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் ரத்ததான முகாமை ஆரம்பித்து வைத்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் காப்பீடுகள் தொடர்பான கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற இருக்கிறது. லட்சங்களில் இருந்த நோய் தொற்று பாதிப்பு 1000 என்ற அளவில் குறைந்து இருக்கிறது என கூறியிருக்கிறார் ராதாகிருஷ்ணன். 1500 என்று இருந்த நோய்த்தொற்று எண்ணிக்கை தற்சமயம் 1,700 ஆக அதிகரித்திருப்பது கவலை தருகிறது என தெரிவித்திருக்கிறார்.

தற்சமயம் நோய்த்தொற்று பரவல் சூழலை புரிந்து கொண்டு பொதுமக்கள் அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். தொடர்ச்சியாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில், 22 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என கூறியிருக்கிறார். முதியவர்கள் அனைவரும் கட்டாயமாக இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார். அதோடு ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று கொண்டு பயன்பெற வேண்டும் என கூறியிருக்கிறார், அதோடு இந்த வருடத்தின் கடைசியில் அதாவது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற காரணத்தால், தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்திவிட வேண்டும் என்று தமிழக அரசு மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.