Connect with us

Breaking News

பணி மாறுதலுக்காக விண்ணப்பித்த செவிலியர்கள்! நவீன முறையில் போன் மூலம் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை! 

Published

on

பணி மாறுதலுக்காக விண்ணப்பித்த செவிலியர்கள்! நவீன முறையில் போன் மூலம் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை! 

பணி மாறுதல் செய்வதற்கு நாமக்கலில் கூகுள் பே மூலம் ரூ.35000 லஞ்சம் பெற்றதாக மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் செவிலியர்களுக்கு மாவட்ட அளவிலான கலந்தாய்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் செவிலியர்கள் கேட்கும் இடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்த 76 ஒப்பந்த செவிலியர்கள் பல்வேறு இடங்களுக்கு இடமாறுதல் உத்தரவு பெற்றனர். இந்த நிலையில், மாநில அளவிலான கலந்தாய்வின் அடிப்படையில் கடந்த 26.7.2021 முதல் 30.7.2021 வரை அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் புணிபுரியும் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர்களை அவர்களின் விருப்பத்தின் பேரில் இடமாற்றம் செய்ய சென்னை மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர் முத்துமணி, சக்திமுருகன் ஆகியோர், கலந்தாய்வு மூலம் இடமாறுதல் பெற்ற ஒப்பந்த செவிலியர்களை, தற்போது பணிபுரியும் இடங்களிலிருந்து விடுவிக்க ரூ.25,000 முதல் ரூ. 35,000 வரை ஒவ்வொருவரிடமும் லஞ்சம் கேட்டதாக தெரிய வந்துள்ளது.

இந்த தொகையை அந்த அதிகாரிகள் கூகுள் பே  செயலி மூலம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. பணம் கொடுத்த செவிலியர்களை உடனே பணியிலிருந்து விடுவித்ததாகவும், இத்தொகையை வழங்காத செவிலியர்களை பணியில் இருந்து விடுவிக்க காலதாமதமும் செய்துவந்துள்ளனர். இதனால் லஞ்சம் தரவிரும்பாத செவிலியர்களில் சிலர், இது பற்றி நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் புகார் கொடுத்திருக்கின்றனர்.

Advertisement

இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.   விசாரணை முடிவில் நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர் முத்துமணி, மற்றும் சக்திவேல் ஆகிய 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement