அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி பயிற்சி! உலக நாடுகளை அலறவிட்ட ரஷ்ய படை வீரர்கள்!

0
86

கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது திடீரென்று போர் தொடுத்தது. இந்த போரை சற்றும் எதிர்பாராத உலக நாடுகள் ரஷ்யாவிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.

மேலும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவிற்கு கண்டனங்கள் தெரிவித்ததுடன் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்து வருகின்றன.

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா இந்த போரை தொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் 70 நாட்களை கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் காரணமாக, பல்லாயிரக்கணக்கான பலியாகியிருக்கிறார்கள் 51 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.

இந்தப் போர் தொடங்கப்பட்டவுடனேயே ரஷ்யா தன்னுடைய அணுசக்தி படைகளை உச்சபட்ச உஷார் நிலையில் இருக்குமாறுஅறிவுறுத்தியது.

அதுமட்டுமல்லாமல் உக்ரைன் போரில் மேற்கத்திய நாடுகள் நேரடியாக தலையிட்டால் அவர்களுக்கு மின்னல்வேக பதிலடி கொடுக்கப்படும் என்றும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்தார். உலகளவில் இது மிகப்பெரிய பேசுபொருளாக மாறிப்போனது.

இந்த சூழ்நிலையில் ரஷ்ய படை வீரர்கள் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை தாக்குதல்களை நடத்தி பயிற்சி பெற்றதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் புதிய தகவலை வெளியிட்டது. இந்த பயிற்சியை சற்றேறக்குறைய 100 படை வீரர்கள் எடுத்ததாக தற்சமயம் தெரியவந்திருக்கிறது.

நேற்று முன்தினம் போலந்து மற்றும் லிதுவேனியா நாடுகளுக்கிடையிலான பால்டிக் கடலில் நடைபெற்ற போர் பயிற்சியின் போது தான் இந்த அணு ஏவுகணை தாக்குதல் பயிற்சியை ரஷ்ய வீரர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை மின்னணு முறையில் ஏவி தாக்குதல் நடத்தி பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக ஏவுகணை அமைப்பு, லாஞ்சர்கள், விமான தளங்கள், பாதுகாக்கப்பட்ட உள்கட்டமைப்பு, ராணுவ தளவாடங்கள், எதிரியின் கட்டளை நிலைகள். உள்ளிட்டவற்றை செயற்கை இலக்குகளாக வடிவமைத்து இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தி ரஷ்ய படையை சேர்ந்தவர்கள் பயிற்சி பெற்றதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

இந்த மின்னணு ஏவல் நடவடிக்கைக்கு பிறகு ராணுவ வீரர்களும் சாத்தியமான பதிலடி தாக்குதல்களை தவிர்ப்பதற்காக தங்களுடைய நிலையை மாற்றுவதற்காக சூழ்ச்சிகளை முன்னெடுத்தார்கள் என்றும், ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்த தகவல்கள் உக்ரைன், ரஷ்யா, போருக்கிடையே புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.