அவர் ஒரு டம்மி பீசு அவர இயக்குறதே நாங்கதான்! யார சொல்ராருனு தெரியுமா!

0
66

எதிர்க்கட்சித் தலைவரை இயங்க வைப்பதே நாங்கள்தான் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்திருக்கின்றார்.

சென்னை எழிலகத்தில் இருக்கின்ற மாநில அவசர கட்டுப்பாட்டு அறையிலிருந்து பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் நிவர் புயல் காரணமாக ஏற்படுகின்ற பாதிப்புகள் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சம்பந்தமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில் தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்கூட்டியே திட்டமிட்டு எடுத்ததால் மிகப் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை இந்தப் புயலை பொருத்தவரையில் இப்போதுவரை எந்த ஒரு மீனவர்களும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை தமிழ்நாட்டில் நிவர் புயல் காரணமாக மூன்று உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கின்றது தமிழ்நாட்டில் தற்போது வரை 3 ஆயிரத்து 85 சிறப்பு முகாம்களில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 317 சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். நிவர் புயல் காரணமாக 101 வீடுகள் சேதமடைந்து இருக்கின்றது. 26 கால்நடைகள் உயிர் இழந்து இருக்கின்றன.

தமிழ்நாட்டில் சேதமடைந்த பயிர்களில் எண்ணிக்கையை கணக்கெடுக்க மாவட்டவாரியாக பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது கணக்கெடுப்பு முடிந்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார். இப்போது புயலால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றது உள்ளாட்சித்துறை சார்பில் புயல் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் இருக்கின்ற இயந்திரங்களை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லும் பணியானது முன்னரே ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

சென்னையில் ஒரு சில இடங்களில் மழை நீர் தேக்கமடைந்து இருக்கின்றது என்பதை நாங்கள் தெரிவித்து இருக்கின்றோம் இவ்வளவு பெரிய புயல் பாதிப்பு சமயத்தில் மழைநீர் செல்ல இயலாமல் இருக்கும் இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கின்றது அதனை உடனடியாக அகற்றுவதற்கு தொடர்ச்சியாக மாநகராட்சி சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்சமயம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால் மக்கள் அச்சத்தில் இருந்தனர் ஆனால் முதல்வர் நேரடியாக சென்றதால் மக்கள் அச்சத்தில் இருந்து மீண்டு இருக்கிறார்கள் புயல் சமயத்தில் சிறப்பாக செயல்பட்டு பாதிப்பு இல்லாமல் இந்த புயலில் இருந்து காப்பாற்றியதற்காக மக்கள் முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள் புயல் பாதிப்புகளை முதலமைச்சர் ஆய்வு செய்வதை பார்த்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவரும் ஆய்வு செய்து வருகின்றனர் எதிர்க்கட்சித் தலைவரை நாங்கள்தான் இயக்கி வருகிறோம் எங்கள் இயக்கத்தை பார்த்து தான் அவர் இயங்கிக் கொண்டிருக்கிறார் என அமைச்சர் தெரிவித்தார்.