இனி உணவங்களில் அமர்ந்து சாப்பிடலாம் – அன்லாக் 1.0வின் புதிய தளர்வு

ஜூன் 30ஆம் தேதி வரை பொது முடக்கம், வழிபாட்டுத் தலங்களுக்கான அனுமதி உள்ளிட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தபோதும், மாநிலங்களின் முடிவே இறுதியானது என்று மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இன்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி ஜூன் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தின் கட்டுப்பாடுகள் தொடரும்.

ஆனால், மத வழிபாட்டுக் கூட்டங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் தமிழகத்தில் தடை தொடரும் என்று தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் டீக்கடை மற்றும் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் உணவகத்தில் இருக்கும் மொத்த இருக்கைகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 8ஆம் தேதி முதல் இந்த அனுமதி செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. குளிர்சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற அறிவிப்பும் இத்துடன் கவனிக்கத்தக்கது.

மார்ச் 25ஆம் தேதி முதல் இன்று வரையிலும் பார்சல் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று கட்டுப்பாடு இருந்த நிலையில் தற்போது அமர்ந்து சாப்பிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது சென்னை மாவட்டம் மற்றும் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Copy

Comments are closed.

WhatsApp chat