இனி இங்கும் ஸ்கேனிங் தான்!! வரி செலுத்த சென்னை மாநகராட்சி கொண்டு வந்த நியூ அப்டேட்!! 

0
156
#image_title

இனி இங்கும் ஸ்கேனிங் தான்!! வரி செலுத்த சென்னை மாநகராட்சி கொண்டு வந்த நியூ அப்டேட்!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி செலுத்தும் வீடு, நில உரிமையாளர்கள் இனி QR கோடு ஸ்கேன் செய்து சொத்து வரி செலுத்தலாம் என்று சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி கூட்டத் தொடரின் போது சென்னை மேயர் பிரியா அவர்கள் இனி சொத்து செலுத்துவோருக்கு வசதியாக QR கோடு மூலமே இனி தொடர்ந்து வரி செலுத்தலாம் என்று கூறியிருந்தார். அது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சி வளாகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள் மூலமாக QR கோடு ஸ்கேன், விபிஎன் முகவரி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், காசோலை மற்றும் வரைவோலை வாயிலாக தங்கள் சொத்துவரியை எளிதாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சொத்து வரி செலுத்திய பிறகு அதற்குரிய ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு நீண்ட நேரம் மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருக்க வேண்டும் எனவும் மற்ற பரிவர்த்தனையால் ஏற்படும் சிரமங்களையும் தவிர்க்கலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இந்த வரி செலுத்தும் நடைமுறை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
CineDesk