இனி மின்கட்டணம் சரமாரியாக குறைவு.. செந்தில் பாலாஜி வெளியிட்ட சூப்பர் அப்டேட்!! தமிழக மக்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

0
153
Now the electricity bill is very low.. Super update released by Senthil Balaji!! Hit the jackpot for the people of Tamil Nadu!!
Now the electricity bill is very low.. Super update released by Senthil Balaji!! Hit the jackpot for the people of Tamil Nadu!!

இனி மின்கட்டணம் சரமாரியாக குறைவு.. செந்தில் பாலாஜி வெளியிட்ட சூப்பர் அப்டேட்!! தமிழக மக்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

தமிழ்நாட்டில் வீடுகள் தோறும் மானியம் மின்சாரம் மற்றும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இதனை ஒழுங்குபடுத்த மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று கூறினர். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் மின் கட்டணம் செலுத்தும் வகையில் புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறி இருந்த நிலையில் தற்போது வரை அது நடைமுறைப்படுத்தவில்லை.

இது குறித்து பலமுறை செந்தில் பாலாஜி-யிடம்  கேள்வி எழுப்பியும் தெளிவான பதில் அளிக்காத நிலையில் மக்கள் குழப்ப நிலையில் இருந்தனர். தற்பொழுது ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவானது காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வரும் நிலையில் செந்தில் பாலாஜி பிரச்சாரம் செய்ததுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவ்வாறு சென்ற பொழுது அங்கிருந்த செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர். அதில் ஒன்றாக மாதந்தோறும் மின் கட்டணம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தற்பொழுது தான் செந்தில் பாலாஜி ஓர் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். 80% மக்கள் தற்பொழுது தான் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வரும் நிலையில் கூடிய விரைவில் மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைப்படுத்தப்படும்.

இதனால் மின்சார கட்டணம் மிகவும் குறைவாக காணப்படும், தற்பொழுது வரை திமுக தங்களது அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் நிலையில் இதுவும் விரைவில் செயல்படுத்தப்படும் என்று கூறினார். இது செயல்படுத்தாததற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தற்பொழுது மின் கணக்கிடும் பணியாளர்கள் 50 சதவீதம் காலியாக உள்ள நிலையில் மாதம்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை கொண்டு வந்தால் போதுமான ஊழியர்கள் இல்லாததால் அது முறையாக செயல்படுத்த இயலாது.

அதனால் பணியாளர்களை முதலில் அமர்த்த வேண்டும். மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள வீடுகளில் விரைவில் ஸ்மார்ட் மீட்டர் அமைக்கப்படும். அதற்கான டெண்டர் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.அவ்வாறு ஸ்மார்ட் மீட்டர் கொண்டு வந்து விட்டால் மின்சாரம் கணக்கீட்டாளர்களின் பணி மாறுபடும். எனவே இது குறித்து ஆலோசனை செய்த பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அது மட்டுமல்லாமல் விசைத்தறிகளுக்கு 750 முதல் ஆயிரம் யூனிட் இலவசம் மின்சாரம் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.