கனமழை எதிரொலி!! மேலும் 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

0
72

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பரவலாக பெய்து வருகின்றது. இந்த கனமழை காரணமாக தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கை மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது.

மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சாலைகளில் தேங்கியுள்ள மழை தண்ணீர் காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு மிகுந்த அவதி ஏற்படுகிறது.

அத்துடன் பணிக்கு செல்பவர்களும் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். பொது போக்குவரத்துகளான பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகளும்நிறுத்தப்பட்டுள்ளன. கடும் வெள்ளத்தினால் சென்னை மற்றும் அதன் புறநகரில் வசிக்கின்ற மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். ஒரே நாள் இரவில் பெய்த கனமழையினால் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்து மக்களை இயல்பிற்கு மாறாக அச்சுறுத்தி வருகிறது.

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார். அத்துடன் அரசு அலுவலகங்களில் நீர் தேங்கியுள்ள காரணத்தால் அவற்றிற்க்கும் விடுப்பு அளித்துள்ளார்.

இத்தகைய சூழலில், தொடர் கனமழையின் காரணமாக விழுப்புரம் மற்றும் கடலூர்‌ மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விருப்ப அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கின்ற பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
Jayachithra