டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேர்விற்கு ஹால் டிக்கெட் வெளியீடு!

0
77
Notification issued by TNPSC! Hall ticket release for this exam!
Notification issued by TNPSC! Hall ticket release for this exam!

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேர்விற்கு ஹால் டிக்கெட் வெளியீடு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.பொது தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.

மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும்  போட்டித்தேர்வுகள் எதுவும் நடத்தப்படாத நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றது .

நடப்பாண்டில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது.ஒரு சில போட்டி தேர்வுகள் நடந்துமுடிந்த நிலையில் அதற்கான முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தலைமைச் செயலக பணி,உதவிப் பிரிவு அலுவலர்கள் ,உதவியாளர் பதவி உள்ளிட்ட குரூப் வி ஏ எழுத்து தேர்வு டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.மேலும் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும் .

தேர்வு எழுதுபவர்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று அவரவர்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

author avatar
Parthipan K