தொலைபேசி அழைப்புகளில் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் ரத்தாகிறது!

0
61

தொலைபேசி அழைப்புகளில் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் ரத்தாகிறது!

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பின் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி தனது தீவிர பரவலால் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. அந்த வகையில் இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.

எனவே, இதுகுறித்த விழிப்புணர்வை நாட்டு மக்களிடையே ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. அந்த வகையில் தொலைக்காட்சி, வானொலி ஆகிய தொலைதொடர்பு மூலம் மக்களுக்கு நாள்தோறும் இதுகுறித்த செய்தியை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தன.

அதன் ஒருபகுதியாக நாட்டில் கொரோனா பரவலின் ஆரம்பம் முதல் மக்களுக்கு கொரோனா பரவல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அறிவிப்புகள் தொலைபேசி அழைப்புகளில் இடம்பெற்று வந்தன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை முடிவுக்கு வந்துள்ளது.

இதனை தொடர்ந்து நாட்டில் நான்காவது அலை வந்தாலும் கூட அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே இதன் காரணமாக தொலைபேசி அழைப்புகளின்போது ஒலிக்கிற கொரோனா விழிப்புணர்வு அறிவிப்பை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று மத்திய தொலைதொடர்புதுறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து தொலைபேசி அழைப்புகளின்போது ஒலிக்கிற கொரோனா விழிப்புணர்வு அறிவிப்புகளை கைவிடுமாறு மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு மத்திய தொலைதொடர்புத்துறை கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே தொலைபேசி அழைப்புகளின்போது வரும் கொரோனா குறித்த விழிப்புணர்வு அறிவிப்பு விரைவில் ரத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Parthipan K