Connect with us

Breaking News

போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு! தொலைதூர பேருந்து ஓட்டுனர்களின் கவனத்திற்கு!

Published

on

notice-issued-by-the-transport-corporation-they-should-no-longer-eat-in-a-separate-room

போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு! தொலைதூர பேருந்து ஓட்டுனர்களின் கவனத்திற்கு!

போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் பயணத்திற்கு இடையில் உணவு அல்லது சிற்றுண்டி உண்பதற்காக நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் நிறுத்தப்படுவது வழக்கம் தான்.

Advertisement

இந்நிலையில் பயணிகளுக்கு பொதுவான இடத்திலும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு தனி அறையில் உணவுகள் வழங்கப்படும். ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு உணவு வழங்க தனி அறை ஒதுக்க வேண்டாம் என உணவகங்கள் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழகம் கூறுகையில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்கப்படும் பொழுது  பொது அறையிலேயே வழித்தட போக்குவரத்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Advertisement

இனி அவர்களுக்கென தனி அறை எதுவும் ஒதுக்கப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் நிரப்ப தமிழக அரசு அரசானை வெளியிட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மொத்தம் 800 காலி பணியிடங்களில் 685 காலி பணியிடங்களை ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கொண்டு நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement