Connect with us

Breaking News

அரசை அவமதித்தது மட்டுமின்றி தேசீய கீதத்திற்கு கூட மரியாதை இல்லை!! ஆளுநரை விளாசும் பாமக தலைவர் அன்புமணி!! 

Published

on

Not only insulting the government but also disrespecting the national anthem!! Bamaka leader Anbumani blasts the governor!!

அரசை அவமதித்தது மட்டுமின்றி தேசீய கீதத்திற்கு கூட மரியாதை இல்லை!! ஆளுநரை விளாசும் பாமக தலைவர் அன்புமணி!!

சட்டப்பேரவையில் இன்று நடந்த கூட்டத்தில் அரசு அளித்துள்ளதை குறிப்பிடாமல் ஆளுநர் பேசிய உரைக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடியாக விமர்சனம் செய்ததையொட்டி அந்த நிமிடமே ஆளுநர் அவையை விட்டு வெளிநடப்பு செய்தார்.இதுகுறித்தது பல கட்சி தலைவர்களும் தனது கருத்தை தெரிவித்த நிலையில் பாமக தலைவரும் தனது கருத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.அதில் வர கூறியிருப்பதாவது,

Advertisement

தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை, சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுனர் தவிர்த்திருக்கிறார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப்பேரவையும் அவமதிக்கும் செயலாகும்

தமிழ்நாடு அரசால் குறிப்பிடப்படும் சில சொற்களில் பாமகவுக்கு உடன்பாடு இல்லை; ஆளுனருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் தயாரித்து வழங்கப்படும் உரையை மாற்றாமல் படிப்பது தான் நாகரிகமும், மரபும் ஆகும்

Advertisement

Advertisement

அச்சிடப்பட்ட ஆளுனர் உரையை மட்டுமே அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும் என்று கோரி முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்த போது, அவை நடவடிக்கைகள் முடிவடைந்து தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுனர் வெளியேறியது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசும் ஆளுனரும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுனரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும்

Advertisement

Advertisement