வேகமாக செல்லும் ரயில் சோதனையில் ஒரு துளி கூட சிந்தாத தண்ணீர் !!

0
93

பெங்களூரு- மைசூரு இடையே அமைக்கப்பட்ட ரயில் பாதை பராமரிப்பு பணிகள், எந்த அளவுக்கு சிறப்பாக உள்ளது என்பதனை விளக்கும் வகையில் ஒரு டம்ளரில் தண்ணீர் வைத்த  சோதனையை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பெங்களூரு- மைசூரு ரயில் பாதையில் சுமார் 130 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூபாய் 40 கோடி மதிப்பில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டது. மேலும் ரயிலில் பயணிக்கும் பயனாளர்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானதாகவும் ,மென்மையாகவும் இருப்பதனை உறுதிப்படுத்தும் வகையில் சோதனை முயற்சியை மேற்கொண்டது. அதில் ரயிலில் ஒரு கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. கர்நாடகாவின் பெங்களூரு மைசூரு வரை வேகமாக செல்லும் ரயிலில்இருந்து ஒரு துளி நீர் கூட வெளியே வரவில்லை.

https://twitter.com/RailMinIndia/status/1322558698691022848?s=20

ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் எந்த அளவிற்கு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாக இருப்பதாக ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் , இந்த சோதனை முயற்சி வீடியோவை ரயில்வே துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

author avatar
Parthipan K