சாட்டை சுழற்றிய சைலேந்திரபாபு! அதிரடி ஆபரேஷன் பிடிபட்ட ரவுடிகள்!

0
99

அண்மைக்காலமாக முன்விரோதம் காரணமாக ரவுடிகள் தாதாக்கள் உள்ளிட்டோர் இடையே மோதல்கள் உண்டாகி கொலை போன்ற சம்பவங்கள் நடைபெறுவது அதிகமாகிக் கொண்டு வருகிறது சென்னை கேகே நகரில் முன்விரோதம் காரணமாக, இல்லத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல மயிலாப்பூரில் ரவுடி மயிலை சிவகுமாரின் உதவியாளர் கொலை சம்பவம் சட்டம்-ஒழுங்கை கேள்விக்குறி ஆக்கியது. தமிழ் நாட்டில் ஆங்காங்கே கொலைகள் நடந்து வருகின்ற நிலையில், தமிழக காவல் துறை இயக்குனராக சைலேந்திரபாபு பதவியேற்ற அவர் அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை ஆணையர் அவர்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

அவர் போட்ட உத்தரவில் ஸ்டாமின் ஆபரேஷன் என்ற பெயரில் சென்ற ஐந்து வருடங்களில் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் உடைய இல்லங்களை கண்காணித்து அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். தமிழக காவல் துறை சார்பாக ஆபரேஷன் ஸ்டாமின் என்ற அடிப்படையில், ரவுடிகளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. பிறகு அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் நள்ளிரவு சமயத்தில் ஆரம்பித்து தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் குற்ற பதிவேடு இருக்கின்ற ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் அவர்கள் பதுங்கும் பகுதிகளில் ஸ்டாமின் ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 36 மணி நேரமாக நடைபெற்ற இந்த ஆபரேஷன் மூலமாக தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்து 370 பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் 2512 ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்து உள்ளார்கள்.

இதுவரையில் 244 குற்றவாளிகள் நீதிமன்ற வழக்குகளின் பிடியானை அடிப்படையில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அதோடு பல வழக்குகளில் தொடர்புடைய 733 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாகவும், காவல் துறை சார்பாக கூறப்பட்டுள்ளது. இதுவரையில் நடத்தப்பட்ட இந்த ஆபரேஷனில் 5 நாட்டுத் துப்பாக்கிகள் 929 கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் என்று ஒட்டுமொத்தமாக 934 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. அதோடு இந்த நடவடிக்கை தொடரும் என்றும் காவல் துறை சார்பாக எச்சரிக்கை செய்யப்பட்டு இருக்கிறது.