எந்த மருந்து மாத்திரையும் பயனளிக்கவில்லையா!! சொரியாசிஸில் இருந்து விடுபட இதை மட்டும் செய்யுங்கள்!!

0
248
#image_title

எந்த மருந்து மாத்திரையும் பயனளிக்கவில்லையா!! சொரியாசிஸில் இருந்து விடுபட இதை மட்டும் செய்யுங்கள்!!

ஒரு நபரின் நோயெதிர்ப்பு அமைப்பு தோல் செல் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும் தவறான சமிக்ஞைகளை அனுப்பும்போது சொரியாசிஸ் அழற்சியை உருவாக்கலாம். அதிகப்படியான செல்கள் தோலின் மேற்பரப்பில் குவிந்து, அரிப்பு மற்றும் வலியுடன் கூடிய செதில் திட்டுகளுக்கு வழிவகுக்கிறது.

இது நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய டயட் உணவுகளாலும், நாம் அணியக்கூடிய இறுக்கமான ஆடைகளாலும், உணவில் அதிகப்படியான உப்பு சேர்த்துக் கொள்வதாலும், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை உண்பதாலும் சொரியாசிஸ் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மேலும் இரவில் நிறைய நேரம் கண் விழித்திருப்பதும் இதற்கு ஒரு முக்கியமான காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது மட்டும் இன்றி நாம் தினமும் உபயோகப்படுத்தக்கூடிய அழகு சாதன பொருட்களிலும், உடல் நறுமண திரவியங்களில் உள்ள வேதியல் பொருட்களால் சொரியாசிஸ் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இதை எவ்வாறு தடுக்கலாம் என்று பார்ப்போம்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மாத்திரை எடுத்துக் கொண்டு குடலை சுத்தம் செய்தாலே தோள்களில் வரக்கூடிய நோய்களைத் தடுக்க முடியும்.

சொரியாசிஸ் 5 லிருந்து ஆறு வகைகள் உள்ளது.

1. தலையில் சொரியாசிஸ் வருவது இதனால் தலைமுடி முழுவதுமாக உதிர்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

2. உடம்பில் வட்ட வட்டமாக சொரியாசிஸ் வருவது.

3. இதே போல முதுகு பகுதிகளிலும், இடுப்பு பகுதிகளிலும் வருவது ஒருவகையான சொரியாசிஸ் நோயாகும்.

4. உடலில் உள்ள மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவது.

இதற்கு அறிகுறிகள் என்றால் தோளில் அரிப்புகள் மற்றும் தோல் வறண்ட நிலையில் காணப்படும்.

சொரியாசிஸ் நோய் உள்ளவர்கள் உப்பு கலந்த உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும் முக்கியமாக கடல் சார்ந்த உணவுகளை உண்ணக்கூடாது.

சில சமயம் தானிய வகைகள் உண்பதை கூட தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு. வெள்ளைப் பூசணி சாறு போன்ற இயற்கையானவற்றை நாம் எடுத்துக் கொண்டாள் நம் உடம்பு நன்றாக இருக்கும்.

மேலும் இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது.

இதை நிரந்தரமாக சரி செய்வதற்கு சித்த மருத்துவத்தில் உள்ள வெட்பாலை தைலத்தை பயன்படுத்தலாம்.

இந்த தைலத்தை நாம் வாய் வழியாகவும் சொரியாசிஸ் உள்ள இடங்களில் தடவுவதன் வழியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் இதற்கென சித்த மருத்துவத்தில் உள்ள சில மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலமாகவும் சொரியாசிஸ் நோயை குணப்படுத்த முடியும்.

சொரியாசிஸ் இறுதி கட்டத்தில் இருப்பவர்கள் இந்த மருந்தை மூன்றிலிருந்து ஐந்து மாதங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் சொரியாசிஸ் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்கள் இரண்டு மாதங்கள் சித்த மருத்துவ மருந்தை எடுத்துக் கொண்டாலே போதும்.