அசைவ உணவு சமைக்க தெரியலையா? இனி கவலை வேண்டாம்

0
127
Non Veg Recipe
Non Veg Recipe

அசைவ உணவு சமைக்க தெரியலையா? இனி கவலை வேண்டாம்

அசைவ உணவு சாப்பிட ஹோட்டலுக்குச் சென்று பணத்தை செலவழிக்க வேண்டாம். வீட்டிலேயே செய்து மகிழ்ச்சியாக உண்ணலாம். இன்று பச்சை நெத்திலி மீன் பொரிச்ச குழம்பு தயார் செய்வது குறித்து பார்க்கலாம்.

பச்சை நெத்திலி மீன் பொரிச்ச குழம்பு

தேவையான பொருட்கள் :

பச்சை நெத்திலி மீன் – 1/2 கிலோ.

பச்சை மிளகாய் – 8.

துருவிய தேங்காய் – 1 மூடி.

உப்பு – தேவைக்கேற்ப.

சின்ன வெங்காயம்- 10.

கசகசா – 2 டீஸ்பூன்.

மஞ்சள் – சிறிதளவு.

எண்ணெய் – 50 கிராம்.

கறிவேப்பிலை – சிறிதளவு.

முந்திரி- 10.

செய்முறை: முதலில் மீனை நன்றாக கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்.தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மைய அறைக்க வேண்டும். அதை 4 டம்ளர் நீர் சேர்த்து குழம்பாக கரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றவும்.பின் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து குழம்பை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.5 நிமிடம் கொதிக்க விட்டு பிறகு மீனை போடவும்.10 நிமிடம் வரை சிறு தீயில் கொதிக்க விடவும். சிறிது நேரம் கழித்து எண்ணெய் மிதக்கும் பொழுது இறக்கி விடவும். இதோ பச்சை நெத்திலி மீன் பொரிச்ச குழம்பு தயார். இப்பொழுது சூடான சாதத்துடன் சேர்த்து உண்டு மகிழுங்கள்.

author avatar
CineDesk