நொச்சிக்குப்கம் மீனவர்கள் மீன்பிடி படகுடன் சாலை மறியல்!!

0
260
#image_title

நொச்சிக்குப்கம் மீனவர்கள் மீன்பிடி படகுடன் சாலை மறியல்!!

சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான இணைப்பு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் மாநகராட்சியை கண்டிக்கும் விதமாக நொச்சிக்குப்கம் மீனவர்கள் மீன்பிடி படகுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இன்று மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல் பெண்கள் உள்ளிட்ட 500க்கம் மேற்பட்டவர்கள் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி, லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஏப்ரல் 18 ஆம் தேதிக்குள் லூப் சாலையில் ஆக்கிரமிப்புகள் இல்லை என அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து நேற்று காலை சென்னை மாநகராட்சி, காவல்துறை, மீன்வளத்துறையுடன் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். இந்த நடவடிக்கைக்கு மீன் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றும் மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறையினர் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட வருகை தந்தார்கள். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பொழுது அப்பகுதி மக்கள் ஏதேனும் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்ய 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் லூப் சாலையில் குவிக்கப்பட்டனர்.

போராட்டம் நடத்துபவர்களை கைது செய்ய பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் இன்றும் சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான இணைப்பு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் மாநகராட்சியை கண்டிக்கும் விதமாக நொச்சிக்குப்கம் மீனவர்கள் மீன்பிடி படகுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இன்று மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல் பெண்கள் உள்ளிட்ட 500க்கம் மேற்பட்டவர்கள் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். நீண்ட காலம் வசிக்கும் எங்களை இந்த இடத்தை விட்டு வெளியேற்ற கூடாது என மீனவர்கள் தெரிவித்தனர்.

மறியல் செய்யும் இடத்திற்கு வந்த இப்பகுதியை உள்ளடக்கிய மயிலாப்பூர் திமுக எம்எல்ஏ வேலு வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மீனவர்களின் கருத்துக்களை மனுவாக கேட்டார். இதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுப்படும் என தெரிவித்தார்.

author avatar
Savitha