அதிமுகவின் விருதுநகரின் முக்கிய புள்ளிக்கு சீட்டு இல்லையா! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!

0
99

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் அதிமுக தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது முதலமைச்சர் வேட்பாளர் என தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர் சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் களம் இறங்குகிறார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் போட்டியிடுகின்றார். அமைச்சர் சி.வி. சண்முகம் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட இருக்கின்றார்.

அந்த வகையில், அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் அனைவரும் தன்னுடைய சொந்த ஊரிலேயே களமிறங்க இருக்கிறார்கள். உதாரணத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர் சொந்த ஊரான எடப்பாடி சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல விழுப்புரம் மாவட்டத்தை சொந்த ஊராகக் கொண்ட சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் விழுப்புரம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட இருக்கின்றார். அதேபோல தேனி மாவட்டத்தைச் சார்ந்த துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர் சொந்த ஊரான தேனி போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.

அவ்வாறு பார்த்தால் அதிமுகவின் முக்கிய புள்ளிகள் எல்லோரும் அவரவருக்கு 100% வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதியிலேயே போட்டியிடுகிறார்கள். அதேபோல கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்த அமைச்சர் எஸ் பி வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அவர் தொகுதி மாறலாம் என்று சொல்லப்பட்டது. இருந்தாலும் சமீபத்தில் திமுக சார்பாக தொண்டாமுத்தூரில் நடத்தப்பட்ட பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையின் காரணமாக அங்கே திமுகவின் செல்வாக்கில் சற்று தொய்வு ஏற்பட்டு இருப்பதால் தன்னுடைய செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ளும் விதமாக எஸ் பி வேலுமணி மறுபடியும் தொண்டாமுத்தூர் தொகுதியிலேயே போட்டியிடலாம் என்று முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அதேபோல வேட்பாளர்கள் தேர்ந்தெடுப்பதிலும் எடப்பாடி பழனிச்சாமி மிக எச்சரிக்கையுடன் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. புதுமுகமாக இருந்தால் கூட மக்களிடம் நற்பெயர் வாங்கிய நபர்களை தேடி கண்டுபிடித்து வேட்பாளராக நிறுத்த இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்று சொல்லப்படுகிறது0 அதே வேளையில் தமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கு இந்த முறை போட்டியிடுவதற்கான வாய்ப்பு கொடுக்கப் போவதில்லை என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. என்றால் சமீப காலமாகவே அவர் பல விஷயங்களில் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசும் விஷயங்கள் ஒவ்வொன்றும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி அது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

இது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு மிகப்பெரிய தலைவலியாக மாறியது ஆகவே அவரிடமிருந்த மாவட்ட செயலாளர் பொறுப்பையும் பறித்துவிடடார் எடப்பாடி பழனிச்சாமி. அப்படி இருக்கையில் அந்த மாவட்ட செயலாளர் பொறுப்பை படித்தபோதே எதிர்வரும் தேர்தலில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கு சீட் இல்லை என்று சொல்லப்பட்டது.

எது எப்படியோ எதிர்வரும் தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வாக இருந்தாலும் சரி, நிர்வாகிகளின் நியமனமாக இருந்தாலும் சரி, அனைத்து விஷயத்திலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கண்ணும் கருத்துமாக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகின்றார். காரணம் எதிர்வரும் தேர்தலில் நிச்சயமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மறுபடியும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்பதே அவருடைய முதன்மை இலக்காக இருந்து வருகிறது.

இதனால் கட்சிக்குள் எந்த பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை ஆனால் ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பது எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் கணக்காக இருந்து வருகிறது. கட்சியில் எந்த பிரச்சனை வந்தாலும் எப்படியேனும் அதனைத் தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் ஆட்சியைப் பிடிக்காவிட்டால் அது நமக்கு மிகப்பெரிய பிரச்சினையாக வந்து முடியும் என்பதை நன்றாக உணர்ந்ததாலேயே முதல்வரின் செயல்பாடு மிகவும் கறாராக இருப்பதாக சொல்கிறார்கள்.