தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படாது : மீண்டும் தமிழின அழிப்புக்கான தொடக்கமா என தமிழர்கள் அச்சம்!

0
74

தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படாது : மீண்டும் தமிழின அழிப்புக்கான தொடக்கமா என தமிழர்கள் அச்சம்!

இலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி 72ஆம் ஆண்டு விடுதலை நாள் கொண்டாடப்பட உள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து விடுதலை நாள் கொண்டாட்டத்தில் தமிழ் மற்றும் சின்ஹளம் ஆகிய மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், விடுதலை நாள் கொண்டாட்டம் தொடர்பாக கட்ந்த திங்கட்கிழமை அமைச்சர் ஜனக பண்டார தென்னகூன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், அடுத்த ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ள விடுதலை நாள் கொண்டாட்டத்தில், சின்ஹள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்றும், தமிழில் இசைக்கப்படாது என்றும், அமைச்சர் கூறியதாக கொழும்பு போஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழின அழிப்புக்கு மகிந்த ராஜபக்சே அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வெற்றி கண்ட நிலையில், தற்போது அண்ணனும் தம்பியும் சேர்ந்து, தமிழின அழிப்புக்கு அடித்தளமிட்டுள்ளனரா என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

author avatar
Parthipan K