வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைக்காது -திருமாவளவனின் சர்ச்சை பேச்சு! கண்டனம் தெரிவிக்கும் பாமக தொண்டர்கள் !

0
144

வன்னியர்களின் தனி இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிராக பேசிய திருமாவளவன்- கண்டனம் தெரிவிக்கும் வன்னிய சமுதாய மக்கள்

வன்னியர் சமுதாய மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேற்றம் அடைய 20 % தனி இட ஒதுக்கீடு கேட்டு, பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்ற கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் தற்போது வரை பாமகவும் மற்றும் வன்னியர் சங்கமும் இணைந்து பல்வேறு போராட்டங்களை தீவிரமாக நடத்திக் கொண்டு வருகிறது.

இந்த இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரம் அடைய ஆளும் அரசுக்கு அதிக நெருக்கடி உருவாகியது .மேலும் ஆளும் அதிமுக அரசு வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தர மறுத்ததால் தங்களுடைய 20 % தனி இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையை தளர்த்தி வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்
மருத்துவர் ராமதாஸ்.

ஆனாலும் அந்த கோரிக்கையை அதிமுக அரசு ஏற்றார் போல் தெரியவில்லை.இதனால் கடுப்பான மருத்துவர் இட ஒதுக்கீடு தந்தால் மட்டுமே கூட்டணி என்று தன்னுடைய கருத்தை வெளியிட்டிருந்தார்.இதனால் அரசியல் களம் லேசாக சூடுபிடிக்க ஆரம்பித்தது.

இதனிடையே வேலூரில் பாமக நடத்தும் போராட்டம் பற்றி பேசிய திருமாவளவன் ஏற்கனவே 69% மொத்த இட ஒதுக்கீடு பற்றி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் 20 % தனி இட ஒதுக்கீடு என்பது சாத்தியமில்லாத ஒன்று அதற்க்கு தேவையில்லாமல் பாமக போராடுகிறது , மருத்துவர் ராமதாஸ் அரசியல் பேரத்திற்க்காக இந்த போராட்டத்தை நடத்தி கொண்டுவருகிறார் என்றும் தான் சார்ந்த சொந்த சமுதாயத்தை நம்பவைத்து ஏமாற்றுபவர் ராமதாஸ் என்றும் பேசியுள்ளார்.

இவ்வாறாக வன்னியர் இட ஒதுக்கீடு பற்றியும் ராமதாஸ் பற்றியும் தவறான கருத்துக்களை கூறியதால் இணையத்தில் பாமகவினர் திருமாவளவனுக்கு எதிராக தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அதில் ஒருவர் நாங்க கூட்டணியில் இருந்தாலும்கூட எதிர்த்து பேச முடியும் போராட முடியும் , ஆனால் தங்களை போல் தோழமை சுட்டுதல் என்று வாழ வில்லை என்றும் மற்றொருவர் Dr. ராமதாஸ் எத்தனையோ தலித் MLAகளை உருவாக்கியுள்ளார். நீ எத்தனை வன்னியர் MLA களை உருவாக்கியிருக்க குறைந்தபட்சம் எத்தனை தலித் MLA களை நீ உருவாக்கியிருக்க.உன் வயிரை மட்டும்தானே வளத்துருக்க என்றும் திருமாவளவனுக்கு எதிராகவும் சிலர் ஆதரவாகவும் இணையத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

வன்னியர்களின் தனி இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றோர் ஆதரவு குரல் கொடுத்த நிலையில் தற்போது திருமாவளவன் வன்னியர் இட ஒதுக்கீடுக்கு எதிராக பேசியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

author avatar
Parthipan K