பிகிலுக்கு அரசியல் நெருக்கடியா? படத் தயாரிப்பு நிறுவனம் சொல்வது என்ன?

சென்னை:  பிகில் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க எந்த அரசியல் கட்சியும் நெருக்கடி தரவில்லை என்று படத்தயாரிப்பாளார் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருக்கிறார்.

அட்லீ இயக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் படம் பிகில். கதாநாயகன் நடிகர் விஜய், நடிகை நயன்தாரா. இவர்கள் தவிர, கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் 2 வேடங்களில் விஜய் நடித்திருப்பதாக கூறப் படுகிறது.  

ஏஜிஎஸ். எண்டர்டெயின்மெண்ட் மிக பிரம்மாண்ட முறையில் தயாரித்திருக்கும் படத்தின் டிரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியாகியது. டிரெய்லர் இணையத்தில் சக்கை போடு, போட்டு வருகிறது.

படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கி உள்ளது. ஆனாலும், அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

ஏன் என்றால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை. அந்த விவகாரத்தில், அரசியல் தலையீடு இருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை கூட்டி இருக்கின்றன.

இந் நிலையில், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியதாவது: பிகில் படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவதில் எந்த அரசியல் கட்சியும் நெருக்கடி கொடுக்கவில்லை. நாங்கள் சுதந்திரமாக செயல்படுகிறோம்” என்றார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Copy
WhatsApp chat